மோடியை கிண்டல் செய்வதில் கேரள இளைஞர்கள் ஆர்வம்.. பெட்ரோல் பங்கில் #FitnessChallenge

சமூகதளங்களில் தங்களின் ஆதரவை தந்துள்ளனர்.

பிரதமர் மோடி நாட்டில் உள்ள பிரச்சனைக்கு பதில் சொல்லாமல் விராட் கோலியின் FitnessChallenge க்கு பதி அளித்ததை கேரள இளைஞர்கள் வரிசையாக கிண்டல் செய்து வருகின்றன.

நாடு முழுவது பல்வேறு பிரச்சனைகள் தலைவிரித்துள்ளன. தமிழகத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு, பெட்ரோல் விலை அதிகப்படியான உயர்வு, பொருளாதார வீழ்ச்சி என ஒருபக்க பல பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில் பிரதமர் மோடி FitnessChallenge பற்றி ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார்.

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ரத்தோர் ஃபி ஆரம்பித்த இந்த சேலன்ஞ் , மோடி வரை சென்று தற்போது வைரஸ் போல் பிரபலங்கள் மத்தியில் பரவி வருகிறது. உங்களின் உடலை நீங்கள் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நீங்கள் என்ன செய்கிறீர்கள்?அதை வீடியோவாக வெளியிட்டு ட்விட்டரில் #FitnessChallenge என்று பதிவு செய்ய வேண்டும்.

இதுதான் இந்த சேலன்ஞின் முக்கிய நோக்கம். சமீபத்தில் கோலி இந்த போட்டிக்கு பிரதமர் மோடியை அழைத்து இருந்தார். அவரும் தனது ட்விட்டர் பக்கத்தில் சவாலை ஏற்பதாகவும் விரைவில் வீடியோவை வெளியிடுகிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்கு நாட்டு மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில், எப்போதுமே மோடி அரசை விமர்சிப்பத்தில் முன்னோடியாக கேரள அரசும், கேரள மக்களும் FitnessChallenge சவாலையும் விட்டு வைக்கவில்லை. பெட்ரோல் விலை உயர்வு, FitnessChallenge இரண்டையும் கண்டிக்கும் விதத்தில், மோடிக்கு எதிரான வாசகம் அடங்கிய பதாகைகளுடன் பெட்ரோல் பங்குகளுக்கு சென்று கேரள சேட்டன்ஸ் நூதனமாக போராட்டம் நடத்தியுள்ளனர்.

பெட்ரோல் பங்கில் உடற்பயிற்சி செய்வது,அங்குள்ள தரையில் படுத்துக் கொண்டு தண்டால் எடுப்பது என்று பலவிதமான போராட்டங்களை செய்து அசத்தியுள்ளனர். இதற்கு மக்கள் பலரும் சமூகதளங்களில் தங்களின் ஆதரவை தந்துள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close