funny videos: குழந்தைகளுக்கு எப்போதும் விளையாடத் துணை தேவை. பெரும்பாலும் அவைகள் தன் வயதை ஒத்தவர்களிடமும், தன்னைவிட வயது குறைந்தவர்களிடமுமே அதிக நேரம் விளையாட விரும்புகின்றன. அதுபோல் குழந்தைகள், வளர்ப்பு பிராணிகளிடமும் அதிக பாசம்காட்டி விளையாட விரும்பும்.
ஆனால் வளர்ப்பு பிராணிகளால் குழந்தைகளுக்கு ஆபத்தும் ஏற்படக்கூடும் என்பதால் சிலர் வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்ப்பதை தவிர்த்து வருகின்றனர். ஆனால் உண்மையில் அப்படி இல்லை. சில செல்லப்பிராணிகள் தங்களது உயிரைக் கொடுத்து குழந்தைகளை காப்பாற்றும். மனிதர்களுடன் ஒப்பிடுகையில் செல்லப்பிராணிகள் நூறு மடங்கு குழந்தைகளுக்கு பாதுகாப்பானது என்பதை இந்த சம்பவம் காட்டியுள்ளது.
செல்லப் பிராணிகள், தன்னை வளர்ப்பவர்கள் மீது எவ்வளவு பாசம் வைக்கும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறது இந்த வீடியோ. குழந்தைகள் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளின் காதைப் பிடித்து இழுக்கும். வாலைப் பிடித்து கடிக்கும். இந்த இம்சைகளை தாங்கிக்கொள்ள முடியாமல் செல்லப்பிராணிகள் திருப்பி கடித்துவிடும்.
அப்படி கடித்தாலும், குழந்தைகள் அழுவதை பார்த்ததும் அதுவே சென்று அவர்களின் காலை பிடித்து இழுக்கும், கண்களை துடைக்கும், அவர்களிடம் மன்னிப்பு கேட்கும் அத்தனை உடல் மொழிகளையும் வெளிப்படுத்தும். இது பார்ப்பதற்கே செம்ம க்யூட்டாக இருக்கும்.அப்படி ஒரு வகையான வீடியோவை தான் இப்போது உங்கள் பார்வைக்கு கொண்டு வந்துள்ளோம்.
ஆனால் கொஞ்சம் வித்யாசமானது. குளத்துக்கு அருகில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுமி ஒருவர் தவறுதலாக தன்னுடைய பந்தை குளத்தில் விட்டு விடுகிறார். மிகவும் ஆழமாக இருக்கும் அந்த குளத்தின் ஆபாயம் தெரியாமல் பந்தை அந்த சிறுமியே எடுக்க கீழே இறங்க முயற்சிக்கிறார்.
One word this video… pic.twitter.com/D1jpArOdco
— Physics-astronomy.org (@OrgPhysics) 16 June 2019
இதை பார்த்துக்கொண்டிருந்த அவரின் செல்ல பிராணியான நாய் உடனே, பாய்ந்து சென்று அந்த சிறுமியை இழுத்து கீழே தள்ளி விட்டு, அதுவே குளத்தில் இறங்கி பந்தை எடுத்து வந்து தருகிறது. இப்போது சொல்லுங்கள், மனிதர்களை விட நாய்கள் எந்த விதத்தில் பாசத்திலும், பாதுகாப்பிலும் சளைத்தவை?