உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் குழந்தை ஒன்று கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆகிய சம்பவத்தையடுத்து, அக்குழந்தையின் உறவினர் நீதி கேட்டு கதறும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், "பிரதமர் மோடியும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் இந்த சம்பவத்தை தடுக்காமல் எங்கே சென்றார்கள்? என் வயிறு எரிகிறது. இந்த கொடுமை நடந்த பிறகு, இனி ஏன் நாங்கள் உயிரோடு வாழ வேண்டும்? பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து சாகிறோம். அந்தப் பிஞ்சுக் குழந்தைக்கு என்ன தெரியும்? அதற்கு இப்படியொரு கொடுமை நிகழ்ந்துள்ளதே. இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்றும் அந்த இளைஞர் கோரியுள்ளார்.