வீட்டின் பின்புறம் பதுங்கி இருந்த 10 அடி நீள ராட்சத முதலை... ஏரியில் விட்ட சிதம்பரம் வனத்துறையினர்

பிடிபட்ட முதலை சுமார் 10 அடி நீளமும், 400 கிலோ எடையும் கொண்டது. இது அருகிலுள்ள வாய்க்கால், குளம் அல்லது குட்டை பகுதிகளிலிருந்து இரை தேடி வந்து இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிடிபட்ட முதலை சுமார் 10 அடி நீளமும், 400 கிலோ எடையும் கொண்டது. இது அருகிலுள்ள வாய்க்கால், குளம் அல்லது குட்டை பகுதிகளிலிருந்து இரை தேடி வந்து இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
WhatsApp Image 2025-09-29 at 16.36.23_8433f6de (1)

சிதம்பரம் அருகே வீட்டின் பின்புறம் பதுங்கி இருந்த 10 அடி நீள ராட்சத முதலையை வனத்துறையினர் பிடித்து அருகில் உள்ள ஏரியில் விட்டனர். சிதம்பரம் அருகே உள்ள கூடுவேலி வடக்கு பகுதியை சேர்ந்தவர் அருள்பிரபு. தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு குடும் பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை 3.30 மணியளவில் வீட்டின் பின்பு றம் ஏதோ ஊர்ந்து செல்லும் சத்தம் கேட்டது. இதனால் திடுக்கிட்டு எழுந்த அருள் பிரபு வீட்டின் பின்புறம் பார்த்தார். அப்போது ராட்சத முதலைT வீட்டின் பின்புறம் பதுங்கி இரு படத்தில் காணலாம்.

Advertisment

பதுங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வனத்துறையினர் விரைந்தனர் பின்னர் இது குறித்து அவர் உடனடியாக சிதம்பரம் வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தார். பின்பு அதன் பேரில் மாவட்ட வன அலுவலர் குருசாமி தலைமையில் வனச்சரக வசந்தபாஸ்கர் மற்றும் வனக்காப்பாளர்கள் விரைந்து சென்று வீட்டின் பின்புறம் பதுங்கி இருந்த ராட்சத முத லையை பிடித்து அருகில் உள்ள ஏரியில் கொண்டு விட்டனர்.

பிடிபட்ட முதலை 10 அடி நீளமும், 400 கிலோ எடையும் இருந்தது . அருகில் உள்ள வாய்க்கால் அல்லது குளம், குட்டையில் இருந்து இரை தேடி வந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. 

Advertisment
Advertisements

பாபு ராஜேந்திரன் கடலூர்

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: