தப்பிக்க போறனு பூங்காவில் சாகசம் செய்த க்யூட் பாண்டா - வைரல் வீடியோ
தகவலறிந்து பாண்டா இருப்பிடத்திற்கு விரைந்த வந்த பூங்கா நிர்வாகிகள், அதற்கு பிடித்தமான உணவுகளை காட்டி பாண்டாவை சமாதானப்படுத்தி மீண்டும் அழைத்து வந்தனர்.
பெரிய உருவம், அழகிய தோற்றம், கறுப்பு-வெள்ளை நிறம் கொண்ட பாண்டாக்கள், மனிதர்களின் பிடித்தமான விலங்குகளாக வளம்வருகின்றன. ஜப்பான், சீனாவில் பிரபலமான பாண்டாக்களை, காண முடியவில்லையென எங்காத நபர்களும் அதிகம். அத்தகைய பாண்டாக்கள் செய்யும் க்யூட் சேட்டைகளின் வீடியோ சமூக வலைதளத்தில் ஆல் டைம் ட்ரெண்டிங்கில் இருக்கும். அப்படியொரு பாண்டாவின் சாகசம் வீடியோ ஒன்று, சமூக வலைதளத்தில் ஹிட் அடித்துள்ளது.
Advertisment
பெய்ஜிங் விலங்குகள் பூங்காவில் வளர்க்கப்படும் 6 வயதான Meng Lan என்ற பாண்டா கரடி விளையாடுவதற்காக கொடுக்கப்பட்ட சிவப்பு பந்தின் மீது ஏறி, அதிலிருந்து 2 மீட்டர் உயரமுள்ள பாதுகாப்பு வேலி மீது ஏறி வெளியேற முயற்சி செய்தது.
வேலி மீது ஏறிய பாண்டாவுக்கு அடுத்த என்ன செய்ய வேண்டும் என்ற குழப்பத்தில் தொங்கியப்படி இருந்தது. பாண்டாவின் சாகசத்தை பார்வையாளர்கள் செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர்.
ஆனால், பாண்டாவின் முயற்சி தோல்வியில் தான் முடிந்தது. தகவலறிந்து பாண்டா இருப்பிடத்திற்கு விரைந்த வந்த பூங்கா நிர்வாகிகள், அதற்கு பிடித்தமான உணவுகளை காட்டி மீண்டும் வேலிக்குள் பாண்டாவை கொண்டு வந்தனர்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியான நிலையில், இது குங் ஃபூ பாண்டா தானே என ஒருவர் பதிவிட்டார். மேலும், இந்த பாண்டா 2016 ஆம் ஆண்டில், குழந்தையாக இருந்தபோது இதேபோன்ற ஸ்டண்ட் ஒன்றை எடுக்க முயற்சித்ததையும் நினைவுக்கூர்ந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil