Viral Video: காட்டில் ஒரு ராட்சத மலைப் பாம்பு ஒரு ஆட்டைப் பிடித்து இறுக்கிக் கொல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மலைப் பாம்பு ஆட்டைக் இரையாக்கும் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பரிதாபப் பட்டாலும், இயற்கை அதன் போக்கில் சொல்லட்டும் என்று பதிவிட்டு வருகின்றனர்.
வனப்பகுதியில் ஒரு ராட்சத மலைப்பாம்பு ஆடு ஒன்றைப் பிடித்து, அதன் மீது தனது பிடியை இறுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான், இந்த சூழ்நிலையில், மக்கள் ஆட்டைக் காப்பாற்ற முயற்சிப்பீர்களா அல்லது மலைப்பாம்பு அதன் இரையை விழுங்க விடுவீங்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ராட்சத மலைப் பாம்பு ஆட்டைப் பிடித்து இறுக்கும் வீடியோ 59,000-க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் நிறைய பேர் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
ஒரு எக்ஸ் பயனர், “மலைப் பாம்புக்கு கொஞ்சம் புரதம் இருக்க வேண்டும், இயற்கை அதன் போக்கில் செல்லட்டும், மற்றொரு பயனர், “இயற்கை அதன் போக்கில் செல்லட்டும், நாம் இங்கு இருந்ததைவிட இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளாக அழகாக செயல்பட்டு வரும் ஒரு அமைப்பில் நாம் தலையிடக்கூடாது.” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
“சில நேரங்களில் உணவுச் சங்கிலி பாதைகளால் பாதிக்கப்படுகிறோம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உணவுச் சங்கிலியின் வழி தேவை. இருப்பினும், அங்கே மலைப் பாம்பின் பிடியில் ஆட்டுக்குப் பதிலாக யாராவது மனிதன் இருந்தால், மனிதன் மாமிச உண்ணிகளை விட்டுவிட மாட்டான். எனவே, இதில் ஆட்டின் உரிமையாளர் தங்கள் முடிவை எடுக்கலாம்” என்று ஒரு பயனர் கருத்து கூறியுள்ளார்.
சமீபத்தில், காட்டில் இயற்கை உபாதையைக் கழித்த மனிதனை 15 அடி நீள மலைப்பாம்பு பிடிக்க முயற்சிக்கும் வீடியோ வைரலானது. இந்த சம்பவம் குறித்து வன பாதுகாவலர் மகேஷ் சந்திர குஷ்வாஹா கூறுகையில், மலைப்பாம்பு கழுத்தில் சுற்றியதால் அந்த நபர் மூச்சுவிட சிரமப்பட்டார். அத்தகைய சூழ்நிலையில் ஒருவரால் ஒரு விலங்கு கொல்லப்பட்டால், அவர் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“