புலிக்குட்டிகளை சீண்டி மகிழும் குரங்கு – வைரலாகும் வீடியோ

Viral video : இந்த வீடியோவிற்கு, புலிக்குட்டிகளுக்கு அக்குரங்கு மரம் ஏற கற்றுத்தருவது உள்ளிட்ட கருத்துகளை, நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

Gibbon monkey, tiger cubs, assam, viral video, IFS Susanta Nanda, twitter, video, viral netizens, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil
Gibbon monkey, tiger cubs, assam, viral video, IFS Susanta Nanda, twitter, video, viral netizens, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil

புலிக்குட்டிகளோடு, கிப்பான் வகை குரங்கு ஒன்று விளையாடி மகிழும் வீடியோவை, இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா, டுவிட்டரில் பதிவிட்டிருந்தார், அந்த வீடியோ, நெட்டிசன்களால் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து சுசந்தா நந்தா, டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, இதுபோன்ற காட்சியை நான் இதுவரை கண்டதில்லை. கிப்பான் வகை குரங்கு ஒன்று, புலிக்குட்டிகளை அநாயசமாக தொந்தரவு செய்ததை இதுவரை நான் கண்டதில்லை.

கிப்பான் வகை குரங்குகள், உருவத்தில் சிறியதாகவும், மரத்திற்கு மரம் எளிதில் தாவும் வகை ஆகும். இந்த வகை குரங்குகள் பெரும்பாலும் அமைதியானது ஆகும். தான் இருக்கும் பகுதியில் கிடைக்கும் பழங்கள் உள்ளிட்ட உணவுவகைகளை தின்று அவை திரிந்து கொண்டிருக்கும்.
அசாம் மாநிலத்தில் உள்ள உயிரியல் பூங்காவில், கிப்பான் வகை குரங்கு ஒன்று, மரத்தின் அடியில் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும் புலிக்குட்டிகளை சீண்டி விளையாடுகிறது. அந்த புலிக்குட்டிகளும், குரங்கை பிடிப்பதற்காக அங்குமிங்கும் ஓடுகிறது. ஆனால், குரங்கு பிடிபட்டதாக தெரியவில்லை.
புலிக்குட்டிகளோடு, குரங்கு விளையாடி மகிழும் வீடியோவை பார்த்தாலே, தனது மனது இலகுவாக உணர்வதாக வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோவிற்கு, புலிக்குட்டிகளுக்கு அக்குரங்கு மரம் ஏற கற்றுத்தருவது உள்ளிட்ட கருத்துகளை, நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Gibbon monkey tiger cubs assam viral video ifs susanta nanda twitter video

Next Story
‘பாப் கட்டிங்’ செங்கமலம் யானை – சோஷியல் மீடியாவில் கூட ரசிகர்கள்bob hair cutting elephant sengamalam, tamil viral news, latest viral news, 'பாப் கட்டிங்' செங்கமலம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com