giraffe, giraffe snatches groom turban video, stanley the giraffe, giraffe eats indian grooms turban during photo shoot, california, indian couple in malibu, california, trending news, indian express news
திருமண போட்டோஷூட்டில், மணமகன் கட்டியிருந்த டர்பனை இரண்டாவது முறையாக ஒட்டகச்சிவிங்கி பறித்துகொண்ட வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Advertisment
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் மலிபு பகுதியில் உள்ள சாடில்ராக் ராஞ்ச் மலைப்பகுதியில் புதுமண தம்பதியினர் போட்டோஷூட் நடத்த திட்டமிட்டனர். அப்பகுதியில் ஒட்டகச்சிவிங்கிகள் அதிகம் உள்ளதால், அவற்றிற்கு அருகில் நின்று போட்டோ எடுக்க அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
போட்டோஷூட்டும் சிறப்பாக சென்றுகொண்டிருந்தது. ஒட்டகச்சிவிங்கியின் அருகில் நின்று போட்டோக்களை எடுத்துக்கொள்ள விரும்பிய தம்பதி, அதன் அருகில் சென்றனர். அதுவரை அமைதியாக நின்றிருந்த ஒட்டகச்சிவிங்கி, மணமகனின் தலையில் இருந்த தலைப்பாகை (டர்பனை) பிடித்து இழுத்ததால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. போட்டோகிராபர் துரிதமாக செயல்பட்டு அந்த டர்பனை, ஒட்டகச்சிவிங்கியிடம் இருந்து பறித்து விட்டார்.
Advertisment
Advertisements
பின் மீண்டும் போட்டோஷூட் தொடர, ஒட்டகச்சிவிங்கியும், இந்த முறை எப்படியும் டர்பனை பிடுங்கிக்கொண்டு தான் கட்டிக்கொள்ள நினைத்ததோ என்னவோ, மீண்டும் மணமகனிடம் இருந்து டர்பனை இரண்டாவது முறையாக பறித்துக்கொண்டது.
இந்த வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil