மகள்களைப் பெற்ற அப்பாக்கள் கொண்டாடும் வீடியோ வைரல்!

ஆண் குழந்தைகள் அம்மாக்களிடமும் பெண் குழந்தைகள் அப்பாக்களிடமும் செல்லமாக இருப்பார்கள். அதிலும் பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளைவிட அப்பாக்கள் அளவில்லா பிரியமும் பாசமும் வைத்திருப்பார்கள். இதனை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் ஒரு பெண் குழந்தை பேசும் வீடியோ மகள்களைப் பெற்ற அப்பாக்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளது.

girl child speaking video, kannada girl child video, வைரல் வீடியோ, அப்பாக்கள் கொண்டாடும் வீடியோ, girl child says love daddy, twitter video, viral video, facebook video, funny video

மகள்களைப் பெற்ற அப்பாக்கள் சந்தோஷத்துடன் கொண்டாடும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரல் ஆகியுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சில சுவாரசியமான வேட்பாளர்கள்!

பொதுவாக ஆண் குழந்தைகள் அம்மாக்களிடமும் பெண் குழந்தைகள் அப்பாக்களிடமும் செல்லமாக இருப்பார்கள். அதிலும் பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளைவிட அப்பாக்கள் அளவில்லா பிரியமும் பாசமும் வைத்திருப்பார்கள். இதனை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் ஒரு பெண் குழந்தை பேசும் வீடியோ மகள்களைப் பெற்ற அப்பாக்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளது.


கன்னட மொழியில் பேசுகிற ஒரு பெண் குழந்தையிடம் உன்னை வெளியே அழைத்துச் செல்பவர் யார் என்று கேட்கிறார். அதற்கு அந்த குழந்தை அம்மா என்று பதில் அளிக்கிறது.
உன்னை குளிக்க வைப்பது யார் என்று கேட்க அதற்கு அந்த குழந்தை அம்மா என்று பதில் அளிக்கிறது.

அதே போல, உனக்கு சாப்பாடு ஊட்டுவது யார் என்று கேட்க குழந்தை அம்மா என்று பதில் அளிக்கிறது. உனக்கு பொம்மைகள் தருவது யார் அதற்கு அந்த குழந்தை அம்மா என்று கூறுகிறது. உனக்கு டிரஸ் செய்வது யார் என்று கேட்க அதற்கு அந்த குழந்தை அம்மா என்று பதில் அளிக்கிறது.

கடைசியாக அந்த பெண் குழந்தையிடம் உனக்கு யாரைப் பார்த்தால் பிடிக்கும் என்று கேட்க அந்த குழந்தை மகள்களைப் பெற்ற அப்பாக்கள் எல்லாம் சந்தோஷம்படும்விதமாக அப்பா என்று பதில் அளித்து அனைவரையும் கொண்டாடச் செய்துள்ளார்.

இந்த பெண் குழந்தை தனக்கு எல்லாவற்றையும் அம்மா செய்தாலும் அப்பாதான் பிடிக்கும் என்று சொல்லும் இந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரல் ஆகியுள்ளது.

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Girl child says likes daddy viral video

Next Story
புத்தாண்டு கொண்டாட்டம் : நடனமாடும் தோனி-சாக்‌ஷி, விடியோ வைரல்MS Dhoni dances with his wife Sakshi Dhoni during New Year's 2020 celebration
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express