New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/10/atm-dance.jpg)
Girl dances while withdrawing money from ATM viral video: ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கும்போது குத்தாட்டம் ஆடிய பெண்; இணையத்தில் வைரலாகும் வீடியோ
ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது பெண் ஒருவர் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களில் பலரும் பல்வேறு வீடியோக்களை பதிவேற்றி வருகின்றனர். அவற்றில் ஒரு சில வீடியோக்கள் வைரலாகி எல்லோராலும் பகிரப்படுகிறது, பார்க்கப்படுகிறது. அப்படியான சில வீடியோக்களில் நகைச்சுவையான அல்லது ரசிக்கும்படியான வீடியோக்களுக்கு தனி இடம் உண்டு. இந்த வகையான வீடியோக்களை பார்க்கும் இணையவாசிகள் தங்கள் கவலைகளை மறந்து சிரிக்கின்றனர்.
அப்படியான வீடியோக்களில் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கும் பெண் ஒருவர், செயல்பாடு நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் அருமையாக நடனம் ஆடுகிறார். ஒவ்வொரு செயல்பாடுக்கு இடையிலும் ஒரு ஸ்டெப் போடுகிறார். பின்னர் பணத்தை எடுத்து எண்ணிப் பார்த்த பிறகு மீண்டும் செம குத்தாட்டம் போடுகிறார். இப்படியாக, ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் எடுக்கும்போது அந்த பெண் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Ghantaa என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள இந்த வீடியோவை 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இந்த வீடியோவைப் பகிர்ந்த நபர், அதில், “இதுதான் சம்பளம் கிடைத்தவுடன் கிடைக்கும் மகிழ்ச்சி” என பதிவிட்டுள்ளார்.
அந்த பெண் ஏடிஎம் இயந்திரத்தின் முன் எதற்காக ஆடத் துவங்கினார் என்பதற்கான காரணம் யாருக்கும் தெரியவில்லை. இருப்பினும், அவருக்கு இது சம்பள நாளாக இருக்கும் என்றும், சம்பளம் தன் கையில் கிடைத்த மகிழ்ச்சியில் அவர் நடனமாடுகிறார் என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.