New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/03/Girl-selfie-with-annamalai.jpg)
சிறுமி ஒருவர் ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட செல்போனில், பாஜக தலைவர் அண்ணாமலையுடன் செல்ஃபி எடுக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் குறித்து திமுக மற்றும் பாஜக இரு கட்சிகளின் ஆதரவு நெட்டிசன்களும் கம்மெண்ட் செய்து பகிருந்து வருவதால் வைரலாகி வருகிறது.
திமுக தலைவர் ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட தன் தந்தையின் செல்போனில் ஒரு சிறுமி பாஜக தலைவர் அண்ணாமலையுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நிமிடமும் பல புகைபடங்களும் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. அதில், சினிமா, டிவி, அரசியல், சமூகம் என பலவகையான புகைப்படங்களும் வீடியோக்களும் அடங்கும்.
தமிழக அரசியல் நடப்புகள் சமூக ஊடகங்களை பரபரப்பாக்க எப்போதும் தவறுவதில்லை. தமிழக அரசியலில் திமுகவினரும் பாஜகவினரும் சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்துக்கொண்டு மீம்ஸ்களையும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுவது என்பது நாள்தோறும் நடைபெறுகிறது.
ஆனால், இன்று ஒரு வித்தியாசமான புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி அரசியல் நெட்டிசன்கள் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அந்த புகைப்படம் என்னவென்றால், திமுக தலைவர் ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட தன் தந்தையின் செல்போனில் ஒரு சிறுமி பாஜக தலைவர் அண்ணாமலையுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படம்தான் அது.
கரூர்ரில் இன்று நமது மாநில தலைவர் திரு.#அண்ணாமலை கலந்து கொண்ட
— Pradeep Rengasamy Rajaraman (@Pradeep_R_R) March 13, 2022
ஒரு திருமண நிகழ்வில்
குழந்தை ஒன்று தலைவருடன் செல்பி எடுக்க விருப்பம் தெரிவிக்க அவரின் செல்போனிலேயே செல்பி எடுக்கும் காட்சி.அந்த குழந்தையின் தந்தை திமுகவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.அனைவரும் விரும்பும் தலைவர் pic.twitter.com/lzHDaDfYEC
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்ட கரூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில்
சிறுமி ஒருவர் அவருடைய தந்தையின் செல்போனில் அண்ணாமலையுடன் செல்பி எடுத்துள்ளார். அந்த போனில், மு.க. ஸ்டாலின் புகைப்படம் பதிவாகி உள்ளது.
உங்க கண்ணுக்கு அது தெரியுதா சங்கிஸ்... ???? pic.twitter.com/7lYeTjLrhZ
— Jayam Sk Gopi (Jsk Gopi) (@JSKGopi) March 13, 2022
சிறுமி ஒருவர் ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட செல்போனில், பாஜக தலைவர் அண்ணாமலையுடன் செல்ஃபி எடுக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் குறித்து திமுக மற்றும் பாஜக இரு கட்சிகளின் ஆதரவு நெட்டிசன்களும் கம்மெண்ட் செய்து பகிருந்து வருவதால் வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.