ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான க்ளவுன் மேக்ஸ்வெல், தமிழ் பெண்ணான வினி ராமனை வரும் மார்ச் மாதம் 27ஆம் தேதி திருமணம் செய்ய இருக்கிறார். அவர்களது திருமண அழைப்பிதழ் தமிழில் அச்சடிக்கப்பட்டிருக்கும் நிலையில், இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலிய அணியில் ஆல்ரவுண்டராக அதிரடி காட்டும் மேக்ஸ்வெல், கடந்தாண்டு ஐபிஎல்-இல் ஆர்சிபி அணிக்காக விளையாடினார். இம்முறையில் ஆர்சிபி அணி அவரை தக்க வைத்துக்கொண்டது.

இதற்கிடையில்,மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியா வாழ் தமிழ் பெண்ணான வினி ராமனை காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் இந்திய முறைப்படி 2020ம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக திருமணத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், தற்போது வரும் மார்ச் 27ம் தேதி மேக்ஸ்வெல் – வினி ராமன் தம்பதிகளின் திருமணம் நடைபெற உள்ளது. இவர்களது திருமண பத்திரிகை தமிழ் முறைப்படி மஞ்சள் நிற பத்திரிகையில் தமிழில் அச்சிடப்பட்டுள்ளதால் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேக்ஸ்வெல் திருமண பத்திரிகையை இணையத்தில் பகிரும் இணையவாசிகள், நம்ம ஊர் மாப்பிள்ளை என உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil