யாருய்யா இந்த பொண்ணு.. ஒட்டு மொத்த இணையவாசிகளையும் தேட வைத்த அமெரிக்க வீராங்கனை.

1 முறை அல்ல 3 முறை வானத்திலேயே சுழன்று சிமோன் பைல்ஸ் காட்டிய மாய வித்தை

1 முறை அல்ல 3 முறை வானத்திலேயே சுழன்று சிமோன் பைல்ஸ் காட்டிய மாய வித்தை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
globally trending today

globally trending today

globally trending today : அமெரிக்காவை சேர்ந்த 22 வயதான ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ் இன்றைய தினம் ஒட்டு மொத்த இணையவாசிகளை தலைசுற்ற வைத்துள்ளார். நேற்று முதல் வைரலாகும் அவரின் ஜிம்னாஸ்டிக் வீடியோவை பார்த்த அனைவரின் ரியாக்‌ஷனும் சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.

Advertisment

யார் இந்த சிமோன் பைல்ஸ்?

அமெரிக்காவை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் சாம்பியனான சிமோன் பைல்ஸ் புகழின் உச்சிக்கே சென்ற வீராங்கனை ஆவர். 22 வயதில் இவர் அடைந்திருக்கும் இடம், பெற்றிருக்கும் பட்டங்கள், உரிதாக்கி இருக்கும் விருதுகள் மற்ற வீராங்கனைகளுக்கும் பொறாமை வர வைக்கும். இவரின் ஜிம்னாஸ்டிக் கலை எல்லோரையும் வாவ் சொல்ல வைக்கும். ஒலிம்பிம் போட்டிகளில் இதுவரை இவர் தங்கம் வெல்லாமல் நாடு திரும்பியது இல்லை.ஒரே ஒலிம்பிக்கில் 4 தங்கம் வென்ற 5வது வீராங்கனை என சிறப்பு பட்டத்தையும் சிமோன் பைல்ஸ் சொந்தமாக்கியுள்ளார்.

நேற்றைய தினம் சிமோன் பைல்ஸ் ஜிம்னாஸ்டிக்கில் அசத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. 1 முறை அல்ல 3 முறை வானத்திலேயே சுழன்று சிமோன் பைல்ஸ் காட்டிய மாய வித்தை கண்களை விட்டு நீங்கவே இல்லை.

Advertisment
Advertisements

இந்த காட்சியை நேரடியாக பார்த்த ரசிகர்கள் உட்பட ஒட்டு மொத்த அரங்கமும் ஆச்சரியத்தில் கைகளை பலமாக தட்டினர். சிறிது நேரத்தில் வெளியான வீடியோ இணையவாசிகளை வெகுவாக கவர்ந்தது. அதன் பின்பு கூகுளில் அதிகப்படியானோர் சிமோன் பைல்ஸ் குறித்து தேடலில் ஈடுப்பட்டனர்.

Social Media Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: