New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/09/gold-pav.jpg)
மரப்பெட்டியில் வைத்து பரிமாறப்படும் இந்த உணவு சீஸ் மற்றும் ஃப்ரெஞ்ச் ட்ரஃபில் பட்டர் கொண்டு சமைக்கப்படுகிறது. இதன் மேலே ஹோம்மேட் மிண்ட் மயோ சேர்த்து வழங்கப்படுகிறது.
மிகவும் விலை உயர்ந்த உணவு எது என்றால் நாம் கண்ணை மூடிக் கொண்டு திண்டுக்கல் தலைப்பாக்கட்டி மட்டன் பிரியாணி என்று கூறிவிடலாம். கொஞ்சம் மேற்கத்திய உணவு முறைகளை பின்பற்றும் நபர்கள் என்றால் டோமினோஸ், கே.எஃப்.சி. பர்கர் மற்றும் பீட்சா ரகங்கள், மற்றும் விலையுயர்ந்த ஸ்மூதிகளை கூறுவார்கள். எப்படி பார்த்தாலும் ரூ. 1000-த்தை தாண்டாது என்று வைத்துக் கொள்வோம்.
O’Pao DXB என்று துபாயில் இயங்கி வரும் உணவகம் ஒன்று மும்பையின் தெருக்களில் கிடைக்கும் சுவையான வடப்பாவின் சுவையை சற்றும் குறைக்காமல் வழங்கி வருகிறது. தங்கள் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றவகையில் மிகவும் சுவையான, அதிக ரகங்களை சமைத்து பரிமாறுகிறது. ஆனால், கடந்த வாரம் இந்த பட்டியலில் கூடுதலாக ஒன்றை இணைத்துள்ளது O’Pao DXB.
22 கேரட் தங்கம் சேர்க்கப்பட்ட வடப்பாவ். விலை ரூ. 2000 மட்டும் தான். எல்லாம் ஆயில் பண்ற வேலை. வேற ஒன்னும் இல்லை என்று நீங்கள் கூறுவது எங்களுக்கு கேட்காமல் ஒன்றும் இல்லை.
மரப்பெட்டியில் வைத்து பரிமாறப்படும் இந்த உணவு சீஸ் மற்றும் ஃப்ரெஞ்ச் ட்ரஃபில் பட்டர் கொண்டு சமைக்கப்படுகிறது. இதன் மேலே ஹோம்மேட் மிண்ட் மயோ சேர்த்து வழங்கப்படுகிறது.
உலகில் மிகவும் விலை உயர்ந்த உணவுகள் எல்லாம் துபாயில் தான் கிடைக்கும் போல. ஏற்கனவே தங்க பர்கர், ஐஸ் க்ரீம், ஃப்ரெஞ்ச் டோஸ்ட் மற்றும் பிரியாணி எல்லாம் செய்த இவர்களுக்கு இது ஒன்றும் புதிதில்லை தான். ஆனால் நீங்கள் அடுத்த முறை அங்கே செல்லும் போது கட்டாயம் இந்த உணவையும் ட்ரை பண்ணி பாருங்க
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.