வெற்றிக்கு பிறகும் ’தங்க மகள்’ ஹீமாதாஸ் சந்தித்த அவமானங்கள்..

ஹீமா களத்தில் நிரூப்பித்தால் போதும் ஆங்கிலத்தில் இல்லை

’ஹீமாதாஸ்’   கடந்த 2 நாட்களாக  கூகுளில் அதிக தேடப்பட்டு வரும் பெயர்.    ஓட்டு மொத்த இந்தியாவையும் பெருமை அடைய வைத்திருக்கும்  இந்த பெயர் அவ்வளவு எளிதாக கூகுளில் இடம் பெறவில்லை.   பல அவமானங்கள்,  ஆயிரம் புறக்கணிப்புகள்,  நிறம், மொழி பற்றி  ஏகப்பட்ட விமர்சனங்கள் கிண்டல்கள் இவை எல்லாவற்றையும் தாண்டி   ஜெயித்துக் காட்டி , இன்று   ஒட்டு மொத்த பெண்களுக்கும்  ஒரு ரோடல் மாடலாக மாறியுள்ளார் தங்க மகள் ஹீமாதாஸ்.

20 வயதுக்குட்பட்டோருக்கான சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் தொடர்  பின்லாந்தில் நடைப்பெற்று வருகிறது.  இதில் கலந்து கொண்ட இந்திய பெண் வீராங்கனை ஹீமாதாஸ் 400 மீ ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.   பந்தய இலக்கை 51.46 விநாடிகளில் கடந்து ஹீமா படைத்த பிரம்மாண்ட சாதனையை பற்றித்தான் இன்று ஒட்டு மொத்த இந்தியாவும் பேசி வருகிறது.

அஸ்ஸாம் மாநிலத்தில் இருக்கும்  டிங்கு என்ற மலையோர கிராமத்தில் பிறந்த ஹீமா இன்று   ஒட்டு மொத்த இந்தியாவையும் பெருமையடையும்  வகையில்  சத்தமே இல்லாமல் படைத்திருக்கும் சாதனை  நினைத்து நினைத்து பெருமைக் கொள்ள வேண்டிய ஒன்று.  ஹீமாவை நினைத்து ஒட்டு மொத்த இந்தியாவும் பூரித்து கொண்டிருக்கும் வேளையில்  அனைவரின் எரிச்சலையும் சம்பாதிக் கொண்டது இந்திய தடகள சம்மேளனம் .

வஞ்ச புகழ்ச்சி அணியில்  ஹீமாவின் வெற்றியை கூறிவிட்டு, அவரின் ஆங்கில திறன் பற்றி  இந்திய தடகள சம்மேளனம்  விமர்சனம் செய்திருந்தது யாராலையும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.   தங்கம் வென்ற  ஹீமாவிடம் செய்தியாளர்கள் ஆங்கிலத்தில்  கேள்வி கேட்டனர். அவரும் ஆங்கிலத்தில் தான் பதில் சொன்னார். (அவருக்கு தெரிந்த ஆங்கிலத்தில்)

ஆனால்  அதை  ஒரு குறை போல் கூறி இந்திய தடகள சம்மேளனம்  “ஹீமா அரையிறுதிக்கு முன்னேறியது மகிழ்ச்சி. இருப்பினும் அவர் ஆங்கிலத்தில் சரளமாக பேசவில்லை” என்று ட்விட்டரில்  பதிவிட்டிருந்தனர் . இந்த பதிவை பார்த்து கடுப்பான இந்தியர்கள் இந்திய தடகள சம்மேளனத்தை ட்விட்டரில் விளாச ஆரம்பித்தனர்.  ”ஹீமா களத்தில் நிரூப்பித்தால் போதும் ஆங்கிலத்தில் இல்லை” என்று பதிவிட்டிருந்த  ரிப்ளைக்கு மட்டும் மில்லியன் லைக்ஸ் குவிந்தது.

தன்னை பற்றி இப்படி ஒரு விமர்சனம்  இணையத்தில் சென்றுக் கொண்டிருப்பது பற்றி எதுவுமே தெரியாத ஹீமாஸ்தாஸ்,  களத்தில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்படும் போது தன்னையே அறியாமல்  ஆனந்த கண்ணீரில் நனைந்து  அனைவரையும்  நெகிழ வைத்தார்.

விமர்சனங்கள் ஒருபக்க அதிகம் ஆனதும் இந்திய தடகள சம்மேளனம் ஹீமா குறித்த  பதிவிற்கு மன்னிப்பு கேட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close