சுதந்திர இந்தியாவின் முதல் கொடியேற்ற நிகழ்வை புகைப்படம் எடுத்த ஹோமாய் வியாரவல்லா பிறந்த தினம் இன்று

இந்தியாவின் முதல் பெண் புகைப்பட கலைஞர் ஹோமாய் வியாரவல்லாவின் 104-வது பிறந்த தினமான இன்று (சனிக்கிழமை), கூகுள் நிறுவனம் டூடுள் அமைத்து அவரை சிறப்பித்துள்ளது.

By: December 9, 2017, 3:35:25 PM

இந்தியாவின் முதல் பெண் புகைப்பட கலைஞர் ஹோமாய் வியாரவல்லாவின் 104-வது பிறந்த தினமான இன்று (சனிக்கிழமை), கூகுள் நிறுவனம் டூடுள் அமைத்து அவரை சிறப்பித்துள்ளது.

ஹோமாய் வியாரவல்லா சுதந்திர இந்தியாவின் முதல் கொடியேற்ற நிகழ்வு, சுதந்திர போராட்டம், மகாத்மா காந்தியின் மரணம் உள்ளிட்ட பல வரலாற்று நிகழ்வுகளை புகைப்படங்களாக எடுத்தவர்.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஹோமாய் வியாரவல்லா கடந்த 1913-ஆம் ஆண்டு பிறந்தார். 1942-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின்போது, ’தி இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா’ பத்திரிக்கையில் பணியாற்றி பல புகைப்படங்களை எடுத்தார்.

அவரது புகைப்படங்கள் ‘டால்டா 13’ என்ற பெயரின் கீழ் பிரசுரமாகின. 13 என்ற எண் அவருடன் மிக நெருக்கமாக இருந்துள்ளது. அவர் பிறந்த ஆண்டு 1913, 13 வயதாக இருக்கும்போதுதான் தன் கணவரை சந்தித்தார், அவரது முதல் காரின் பதிவு எண் டி.எல்.டி. 13.

1973-ஆம் ஆண்டு அவரது கணவர் இறந்துவிட்டபின் புகைப்பட தொழிலை கைவிட்டார் ஹோமாய்.1989-ஆம் ஆண்டு தன் ஒரே மகனை இழந்தார். 2011-ஆம் ஆண்டு ஹோமாய்க்கு பத்மவிபூஷன் விருது வழங்கி இந்திய அரசு கௌரவித்தது. கடந்த 2012-ஆம் ஆண்டு, ஜனவரி 15-ஆம் தேதி ஹோமாய் காலமானார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Google doodle honours homai vyarawalla the first lady of the lens

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X