வெள்ளிக்கிழமை பாரிஸில் 2024 கோடைகால ஒலிம்பிக்கின் தொடக்கத்தைக் கொண்டாடும் அனிமேஷன் டூடுலுடன் டிஜிட்டல் வானத்தை கூகுள் ஒளிரச் செய்தது. இந்த ஆண்டு, சிட்டி ஆஃப் லைட் புதுமை மற்றும் பாரம்பரியத்துடன் மிளிர்கிறது, பிரம்மாண்டமான தொடக்க விழா ஒரு மைதானத்தில் அல்ல, மாறாக பாரிஸில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செய்ன் நதி வழியாக விரிவடைகிறது.
ஆங்கிலத்தில் படிக்க:
கூகுள் டூடுலில், விளையாட்டு வீரர்களாக அனிமேஷன் செய்யப்பட்ட கதாபாத்திரங்கள் செய்ன் நதி மீது மகிழ்ச்சியுடன் கீழே நகர்ந்துக் கொண்டிருக்கின்றன, இது தொடக்க விழா நிகழ்வை உணர்த்துவதாக உள்ளது. இது வண்ணங்கள் மற்றும் இயக்கங்களின் மகிழ்ச்சியான நடனம், இது ஒலிம்பிக் போட்டிகளை வரையறுக்கும் ஒற்றுமை மற்றும் உற்சாகத்தின் உணர்வை எதிரொலிக்கிறது.
கூகுள் டூடுலைக் கிளிக் செய்தால், ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பான அனைத்து சமீபத்திய தகவல்கள் கிடைக்கும் பக்கங்கள் இடம்பெற்றுள்ளன.
தொடக்க விழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு போட்டி தொடங்கும் போது, 200க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களின் பிரமாண்ட அணிவகுப்பு, அதைத் தொடர்ந்து ஒலிம்பிக் சுடரின் சின்னமான விளக்குகள் ஆகியவை தொடக்க நாளின் சிறப்பம்சமாக இருக்கும்.
ஒலிம்பிக்கின் 33வது பதிப்பைக் குறிக்கும் வகையில், 32 விளையாட்டுத் துறைகளில் 329 போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களை பாரிஸ் வரவேற்கிறது. ஆகஸ்ட் 11 ஆம் தேதி முடிவடையும் ஒலிம்பிக் போட்டிகள், 28 பாரம்பரிய ஒலிம்பிக் விளையாட்டுகளுடன் சேர்த்து பிரேக்கிங், ஸ்கேட்போர்டிங், சர்ஃபிங் மற்றும் ஸ்போர்ட்ஸ் க்ளைம்பிங் ஆகிய நான்கு புதிய விளையாட்டுகளின் அறிமுகத்துடன் ஒரு புதிய திருப்பத்தைக் கொண்டுவருகின்றன.
பாரீஸ் 2024 ஒலிம்பிக்கிற்கான இந்திய அணி, 16 விளையாட்டுத் துறைகளில் 117 விளையாட்டு வீரர்களுடன் குறிப்பிடத்தக்க சக்தியாக சென்றுள்ளது. இதில் 70 ஆண்கள் மற்றும் 47 பெண்கள் உள்ளனர். 69 போட்டிகளில் 95 பதக்கங்கள் வரை கொண்டு வருவதை இலக்காக கொண்டு இந்திய வீரர்கள் போராட உள்ளனர். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, மீராபாய் சானு, பி.வி சிந்து, லவ்லினா போர்கோஹைன் மற்றும் ஆண்கள் ஹாக்கி அணியில் ஐந்து பேர் தற்போதைய அணியில் இடம்பெற்றுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“