New Update
/indian-express-tamil/media/media_files/2025/08/02/google-maps-error-2025-08-02-11-24-01.jpg)
எங்க கொண்டுவந்து நிப்பாட்டிருக்க பாத்தியா... கூகுள்மேப் செய்த வேலை; நடைபாலத்தில் சிக்கிய கார்!
கூகுள் மேப்'பை (Google Maps) நம்பி கார் ஓட்டிச் சென்றதால், கரூர் மாவட்டம் குளித்தலை தென்கரை பாசன வாய்க்காலில் உள்ள குறுகிய நடைபாலத்தில் சிக்கிய கார் அந்தரத்தில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எங்க கொண்டுவந்து நிப்பாட்டிருக்க பாத்தியா... கூகுள்மேப் செய்த வேலை; நடைபாலத்தில் சிக்கிய கார்!
கூகுள் மேப்'பை (Google Maps) நம்பி கார் ஓட்டிச் சென்றதால், கரூர் மாவட்டம் குளித்தலை தென்கரை பாசன வாய்க்காலில் உள்ள குறுகிய நடைபாலத்தில் சிக்கிய கார் அந்தரத்தில் தொங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்த முகமது என்பவர், நேற்று தனது மஹிந்திரா சைலோ காரில் கும்பகோணத்தில் இருந்து கோவைக்குச் சென்றுள்ளார். அங்கு பணிகளை முடித்துவிட்டு, மீண்டும் கும்பகோணம் திரும்புவதற்காக திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் குளித்தலை வழியாகப் பயணித்துக் கொண்டிருந்தார்.
குளித்தலையில் உள்ள ஜூம்மா மசூதிக்கு தொழுகைக்காகச் செல்ல வேண்டும் என்பதற்காக, கூகுள் மேப்'பை பார்த்தபடி காரை ஓட்டிச் சென்று உள்ளார். அப்போது, காவிரி படுகையில் உள்ள தென்கரை பாசன வாய்க்காலின் குறுகிய நடைபாலம் வழியாக கார் சென்றது. சிறிது தூரம் சென்றதும், மேலும் செல்ல முடியாமல், காரின் இடதுபுற இரு சக்கரங்கள் அந்தரத்தில் தொங்கி, கார் கவிழும் நிலையில் அந்தரத்தில் நின்றது. காரில் முகமது மட்டுமே இருந்தார். இந்தக் காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், காரின் வலது பக்கத்தில் சிறிது இடம் இருந்ததால், சாதுர்யமாக காரில் இருந்து இறங்கினார். பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு கிரேன் வரவழைக்கப்பட்டு, கார் பாதுகாப்பாக மீட்கப்பட்டது.
கூகுள் மேப்'பை பார்த்தபடி காரை ஓட்டி வந்த முகமது, நடைபாலத்தை சாலை என கூகுள் மேப் காட்டியதால் இந்தக் கடும் சிக்கலுக்கு ஆளாகியுள்ளார். சமீப காலமாக கூகுள் மேப் தவறான வழிகாட்டுதல்களைக் காட்டி வருவது இதுபோன்ற விபத்துகளுக்கும், சிரமங்களுக்கும் வழிவகுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது கூகுள் மேப் பயனாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.