கூகுளில் கடந்த 7 நாட்களாக குரங்கு அம்மை ( Mpox) குறித்து தான் அதிகமான மக்கள் தேடிப் படித்துள்ளனர். கூகுள் ட்ரெண்ட்ஸில் முதல் இடத்தில் உள்ளது. கூகுள் ட்ரெண்ட்ஸின் படி, 500,000 க்கும் அதிகமான முறை இந்த வார்த்தை தேடப்பட்டுள்ளது. இந்தியாவில் 700 சதவீதம் இது குறித்து தேடப்பட்டுள்ளது.
குரங்கு அம்மை பொது சுகாதார அவசரநிலை என்று உலக சுகாதார மையம் றிவித்த பிறகு கூகிள் தேடலில் Monkeypox பற்றிய தேடல் அதிகரித்தது. வைரஸ் தொற்று கண்டறியப்படுவது இது இரண்டாவது முறையாகும். இந்த வைரஸ் காங்கோ ஜனநாயகக் குடியரசையும் (DRC) மற்றும் ஆப்பிரிக்காவில் வளர்ந்து வரும் நாடுகளையும் மோசமாக பாதித்துள்ளது.
உலக சுகாதார மைய தரவுகளின்படி, 2022 முதல் 116 நாடுகளில் குரங்கு அம்மைக்கு 99,176 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 208 இறப்புகள் பதிவாகியுள்ளன.
2. Stree 2 box office collection
பாலிவுட் படமான ஸ்ட்ரீ 2 பாக்ஸ் ஆபிஸ் சமூக வலைதளங்களிலும் புயலைக் கிளப்பியுள்ளது. 'ஸ்ட்ரீ 2 பாக்ஸ் ஆபிஸ் வசூல்' என்ற தலைப்பு 2 மில்லியன் தேடல்களை பெற்றுள்ளது. மற்றும் ஆகஸ்ட் 15 அன்று படம் வெளியானதில் இருந்து தேடல் அளவு 1000 சதவீதம் அதிகரித்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட தலைப்பாக மாறியுள்ளது.
தொடர்ந்து முதல் 10 இடத்தில் இருக்கும் கூகுள் ட்ரெண்டிங் வார்த்தைகள்
3.ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்
4. தார் ரோக்ஸ் ஆன்-ரோடு விலை
5. மம்தா பானர்ஜி
6. கபில் சிபல்
7. மெஹந்தி டிசைன்
8. பாரத் பந்த் ஆகஸ்ட் 21
9. பேடோங்டர்ன் ஷினவத்ரா தாய்லாந்து
10. சர்க்காரி ரிசல்ட்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“