அமெரிக்காவில் விலங்குகள் பூங்காவில் உள்ள ஒரு கொரில்லா சைகை மொழியில் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.அதில் இந்த கொரில்லா தனக்கு பார்வையாளர்கள் யாரும் உணவு அளிக்காதீர்கள் என்று கூறுகிறது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மிகப் பெரிய, பழமையான மியாமி விலங்குகள் பூங்கா உள்ளது. மியாமி விலங்குகள் பூங்கா மியாமி டேட் விலங்கியல் பூங்கா என்று அறியப்படுகிறது.
தெற்கு புளோரிடா மாகாணத்தில் 750 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த விலங்கியல் பூங்காவில் ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட கண்டங்களிலிருந்து 3000க்கும் மேற்பட்ட விலங்குகள் பராமரிக்கப்படுகிறது. அதே போல இதில் 500க்கும் மேற்பட்ட விலங்கு வகைகள் உள்ளன.
இந்த மியாமி விலங்கியல் பூங்காவில் உள்ள ஒரு கொரில்லா பார்வையாளர் ஒருவருக்கு சைகை மொழியில் பார்வையாளர்கள் யாரும் தனக்கு உணவு தராதீர்கள் என்பதை கூறுகிறது. கொரில்லா சைகை மொழியில் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
இந்த கொரில்லா சைகை மொழியில் பார்வையாளர்களுடன் பேசியது பலரையும் கவர்ந்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் இந்த வீடியோவைப் பார்த்து கம்மெண்ட் செய்துள்ளனர்.
ஆனால், இந்த வீடியோ 2013-இல் பதிவு செய்யப்பட்டது என்றும் அது தற்போதுதான் டுவிட்டரில் வரைலாகியுள்ளது என்றும் டெய்லி மெயில் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், கொரில்லாவின் சமர்த்தாக சைகை மொழியில் பேசுவதை பலரும் பாராட்டி வருகின்றனர்.