மகாராஷ்ர்டாவில் தேர்தலில் வெற்றி பெற விராட் கோலி போல் தோற்றம் உடையவரை அழைத்து வந்து ஊர்மக்களை ஏமாற்றிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
”குடிக்காரன் பேச்சு விடிஞ்சா போச்சு” என்ற பழமொழி தமிழ்நாட்டில் ரொம்ப ஃபேவமஸ். ஆனால் தற்போது இந்தியாவில் நிலவி வரும் சூழ்நிலையை பார்த்தால், இதே பழமொழி அரசியல் வாதிகளுக்கும் பொருந்தும் போல் ஆகிவிட்டது. அரசியல் தலைவர்களின் வாக்குகுறுதிகள் தேர்தல் முடிந்ததும் போச்சு.
கடந்த சில தினங்களாக மகாராஷ்ட்ரா மாநிலத்தின் கிராம பகுதிகளில் விராட் கோலியின் புகைப்படம் கவுட் அவுட், பேனர் போன்றவற்றில் அதிகளவில் இடம் பெற்று வந்தன. அதில், கிராம பஞ்சாயத்தில் தேர்தலில் நிற்கும் நபர் ஒருவர், “எங்களை நீங்கள் இந்த தேர்தலில் ஜெயிக்க வைத்தால் விராட் கோலியை அழைத்து வருவோம்” என்று வாக்குறுதி கொடுத்திருந்தார்.
கடந்த மே 25 ஆம் தேதி விராட் கோலி மகாராஷ்ட்ராவிற்கு நேரில் வர இருப்பதாக தகவல்கள் பரவின.விராட் கோலியை நேரில் காண மக்களின் கூட்டம் அலைமோத துவங்கியது. இந்த வாக்குறுதியை நம்பி கிராம மக்களும் பஞ்சாயத்து தலைவருக்கு வாக்களித்து அவரை ஜெயிக்க வைத்தனர். அன்று மாலையே விராட் கோலியை அழைத்து வருவதாக தேர்தலில் போட்டியிட்டவர் மைம் பிடித்து அறிவித்தார்.
ஆனால், உண்மையில் நேரில் வந்தவர் விராட் கோலியை போல் டூப் போடும் நபர். சிறப்பு விருந்தினராக விராட் கோலியை அழைத்து வருவதாக கூறிவிட்டு கடைசியில் டூப் போடும் நபரை அழைத்து வந்து ஊர்மக்களை ஏமாற்றிய கொடுமை பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இதில், அதிர்ச்சி அளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், வந்தவர் விராட் கோலி அல்ல அவரைப் போல் டூப் போடும் நபர் என்றுக் கூட தெரியாமல் கிராம மக்கள் அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளனர்.