New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/12/image-7-1.jpg)
மும்பையைச் சேர்ந்த விஜய் பஸ்ரூர் தனது தாயின் அறையை சுத்தம் செய்யும் போது தனது தாத்தாவின் நோட்புக் ஒன்றை கண்டரிந்தார்.
மும்பையைச் சேர்ந்த விஜய் பஸ்ரூர் தனது தாயின் அறையை சுத்தம் செய்யும் போது தனது தாத்தாவின் நோட்புக் ஒன்றை கண்டரிந்தார்.
அந்த நோட்புக்கில் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர், சி.வி.ராமன் போன்ற ஆளுமைகளின் கையொப்பங்கள் இருந்ததைக் கண்டு பஸ்ரூர் பரவசமடைந்தார். தனது நான்கு சுவர்களுக்குள் மறைக்கப்பட்ட புதையலை கண்டுபிடித்ததைப் போன்று விஜய் பஸ்ரூர் உணருகிறார்.
தனது ட்விட்டர் பதிவில்," கடந்த சில நாட்களாக என் அம்மாவின் இடத்தை சுத்தம் செய்து வருகிறேன். 30 ஆண்டுகளாக வீட்டில் எங்களுக்குத் தெரியாத ஒன்றை கண்டுபிடித்தோம். மகாத்மா காந்தி, நேரு, பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் சி.வி.ராமன் ஆகியோரின் கையொப்பங்களைக் கொண்ட எனது தாத்தாவின் ஆட்டோகிராப் புத்தகத்தைக் கண்டுபிடித்தேன். வித்தியாசாமான அனுபவம்,” என்று பதிவிட்டார்.
Been cleaning my Mom's place over the last few days. On Saturday we discovered something which I wasn't aware of was at my house for the last 30 years.
Discovered my grandfather's autograph book which has signatures of Mahatma Gandhi, Nehru, BR Ambedkar and CV Raman.
Surreal pic.twitter.com/eep8dKsKAz
— Vijay Basrur (@basrur) December 7, 2020
காந்தி கன்னட மொழியில் தனது பெயரை எழுதினார். அம்பேத்கரின் எழுத்துகள் மிகவும் அழகாக உள்ளது . டாக்டர் அம்பேத்கரின் தேதி எழுதும் முறை தனித்துவமானது என்று ட்விட்டர் பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.