எத்தனை பேருக்கு கிடைப்பாங்க இப்படி ஒரு தாத்தா? நெட்டிசன்களை கண் கலங்க வைத்த 80 வயது முதியவர்!

இதை எழுதும் போதே 10 மில்லியனுக்கும் மேலானவர்கள் இந்த வீடியோவை பார்த்து ஆனந்த கண்ணீர் சிந்திவிட்டனர்.

இதை எழுதும் போதே 10 மில்லியனுக்கும் மேலானவர்கள் இந்த வீடியோவை பார்த்து ஆனந்த கண்ணீர் சிந்திவிட்டனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Grandpa painting grand daughter's nails viral video

Grandpa painting grand daughter's nails viral video

Grandpa painting grand daughter's nails viral video : இந்த உலகில் தாத்தா, பாட்டி - பேரன், பேத்திக்குமான உறவுகள் அத்தனை அழகானது. பேரன்பு மிக்கது. அதனால் தான் பேரக்குழந்தைகளுக்கு ஒன்றென்றால் முதலில் துடித்துப் போகின்றார்கள் இந்த தாத்தாக்களும் பாட்டிகளும்.

Advertisment

இங்கிலாந்தை சேர்ந்த ஐலா விண்டர் வொயிட் என்ற 20 வயது பெண், அறுவை சிகிச்சை முடித்துவிட்டு, தன்னுடைய நாட்களை மருத்துவமனையில் கழித்து வருகின்றார். அந்நேரத்தில், அந்த பெண்ணை பார்க்க வருகின்றார்கள் ஐலாவின் 80 வயது மதிக்கத்தக்க தாத்தாவும் பாட்டியும்.

Grandpa painting grand daughter's nails viral video

ஐலாவின் தாத்தா கெய்த், ஐலாவின் கையில், அழகாக நெயில் பாலீஷ் அடித்துக் கொண்டிருக்கின்றார். அப்போது யாரோ அவரிடம் கேள்விகள் கேட்க, “நான் மிகவும் முக்கியமான பணியில் இருக்கின்றேன். எனக்கு இது தான் இப்போதைக்கு முக்கியம்” என்று கூறிவிட்டு, பேத்தியிடம் “உனக்கு இன்னும் எத்தனை கோட்கள் அடிக்க வேண்டும்” என்று வாஞ்சையுடன் கேட்கின்றார்.

Advertisment
Advertisements

இந்த வீடியோவை ஷேர் செய்த ஐலா அதன் கேப்சனில் “கடந்த 30 வருடங்களாக, என்னுடைய பாட்டிக்கு என் தாத்தா தான் நெயில் பாலீஷ் அடுத்து கொண்டிருக்கிறார். அதில் இருக்கும் சாதக பாதகம் அவர் நன்கு அறிவார்” என்று கூறி அனைவரையும் நெகிழ வைத்துவிட்டார்.  இந்த தாத்தாவை பார்க்கும் போது, வெகு தொலைவில் இருக்கும் தாத்தாக்களையும், தாத்தாக்களை இழந்த பேரக் குழந்தைகள் தங்களின் தாத்தா பாட்டிகளை நினைத்தும் நெட்டில் உருக துவங்கிவிட்டனர்.

Viral Social Media Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: