‘சிறந்த உதாரணம்’: மனைவிக்கு ஆதரவாக இந்தியாவிலிருந்து அயர்லாந்துக்கு குடிபெயர்ந்த 'ஃபிட்னஸ் கோச்': குவியும் பாராட்டுகள்

ஃபிட்னஸ் பயிற்சியாளர் கனவ் வோஹ்ரா தனது மனைவிக்கு ஆதரவாக இந்தியாவிலிருந்து அயர்லாந்துக்குக் குடிபெயர்ந்தது குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கும் காணொளி, இணையத்தில் பரவலான பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

ஃபிட்னஸ் பயிற்சியாளர் கனவ் வோஹ்ரா தனது மனைவிக்கு ஆதரவாக இந்தியாவிலிருந்து அயர்லாந்துக்குக் குடிபெயர்ந்தது குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கும் காணொளி, இணையத்தில் பரவலான பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

author-image
WebDesk
New Update
Indian moves to Ireland for wife

தன் மனைவிக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்தியாவிலிருந்து டப்ளினுக்குக் குடிபெயர்ந்ததாக, தனது திருமண நாள் கொண்டாட்டப் பதிவில் கனவ் வோஹ்ரா உணர்வுபூர்வமாகத் தெரிவித்துள்ளார். Photograph: (Image Source: @getfitwithkanav/Instagram)

நவீன உறவுமுறைகள் சில நேரங்களில் யதார்த்தமற்ற எதிர்பார்ப்புகள் மற்றும் பாலினப் பாகுபாடுகளால் சிதைந்துவிடுகின்றன. ஆனால் ஃபிட்னஸ் பயிற்சியாளரான கனவ் வோஹ்ரா, அத்தகைய வழிகளிலிருந்து வேறுபட்டு, இணையவாசிகளைப் பெரிதும் கவர்ந்துள்ளார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

தனது மனைவிக்கு மனமார்ந்த பாராட்டைத் தெரிவித்து, அவரது வேலைக்காகத் தான் இந்தியாவைவிட்டு வெளியேறியதைப் பகிர்ந்து, பலரது மனதையும் வென்றுள்ளார் கனவ் வோஹ்ரா. தனது திருமண நாள் பதிவில், மனைவிக்கு ஆதரவளிப்பதற்காகவும் அவரது லட்சியங்களை நிறைவேற்ற உதவுவதற்காகவும், இந்தியாவிலிருந்து அயர்லாந்தின் டப்ளின் நகருக்குக் குடிபெயர்ந்ததாக அவர் கூறியுள்ளார். இது பலரது இதயங்களைத் தொட்டுள்ளது. தனது மனைவி டப்ளினில் தனது கனவு வேலையைப் பெற்ற பின்னரே தான் இந்த முடிவை எடுத்ததாகக் குறிப்பிட்ட அவர், அவரது லட்சியங்களை எட்டிப்பிடிக்க அவருக்கு உறுதுணையாக இருக்கவே தானும் அவருடன் சென்றதாகப் பதிவிட்டுள்ளார்.

தனது மனைவியின் தொழில் பயணத்தைச் சிறப்பிக்கும் காணொளி ஒன்றைப் பகிர்ந்து, கனவ் வோஹ்ரா எழுதியிருப்பதாவது: “எந்தவிதத் திட்டமும் இல்லாமல் ‘கனவ் வோஹ்ரா’ ஒரு கனவாக மட்டுமே இருந்தபோது, எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது என் மனைவியே. உன்னுடன் என் வாழ்க்கை மிக அற்புதமானதாக இருக்கிறது. சேர்ந்து சிரிப்பது முதல், இனிப்புக்காகச் சண்டையிடுவது வரை, சுக துக்கங்கள் என அனைத்திலும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்திருக்கிறோம். சிறிய விஷயங்களில்கூட மகிழ்ச்சியைக் கண்டறிந்து, நாம் ஒரு சிறப்பான வாழ்க்கையைக் கட்டமைத்துள்ளோம். உன்னில்லாமல் இந்த வாழ்க்கைப் பயணத்தை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. திருமண நாள் வாழ்த்துகள்! என் கதையின் மிகச் சிறந்த பகுதி எப்போதும் நீயாகத்தான் இருப்பாய்.”

வீடியோவைப் பாருங்கள்:

Advertisment
Advertisements

இந்தக் காணொளிப் பதிவு பலரது மனதையும் கவர்ந்தது. ஒருவர், “இது மிகவும் அரிதான ஆனால் அழகான காட்சி! உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள்” என்று பதிவிட்டிருந்தார். மற்றொருவர், “எந்த சூழ்நிலையிலும் தங்கள் துணைக்கு உறுதுணையாக இருக்கும் ஆண்கள் உண்மையிலேயே அற்புதமானவர்கள்!” என்று கருத்து தெரிவித்திருந்தார்.

“வாவ்! அவருக்கு இத்தகைய துணைக் கிடைத்திருப்பது அதிர்ஷ்டம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஒரு பெண் தனக்குத் துணையாக இருக்கும்போது மட்டுமே, ஒரு ஆணால் இது போன்ற ஒன்றைச் செய்ய முடியும். எனவே @getfitwithkanav, அவரைவிடவும் இத்தகைய ஒரு துணையைப் பெற்றது நீங்கள்தான் மிகவும் அதிர்ஷ்டசாலி. மேலும், ஒவ்வொரு முறையும் ஒரு பெண் தனது கனவுகளையும் லட்சியங்களையும் விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்பதை உணர்த்தி, ஒரு சிறந்த உதாரணத்தைப் படைத்த உங்களுக்கு எனது வாழ்த்துகள்” என்று மூன்றாவது நபர் பதிவிட்டிருந்தார்.

Viral News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: