ஒரு வடஇந்திய திருமண விழாவில் மணமகன் தன்னை தொந்தரவு செய்த மாப்பிள்ளைத் தோழனை பொறுமை இழந்து தாக்கிய சம்பவம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. மாப்பிள்ளைத் தோழன் அப்படி என்ன செய்தார் என்று வீடியோவைப் பாருங்கள்.
இணையத்தால் கட்டப்பட்ட இன்றைய காலத்தில் சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது. ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் சுவாரசியமான வீடியோக்களைப் பார்கிறபோது அதை பகிர்ந்து சில மணி நேரங்களிலேயே அதை இணையத்தில் வைரலாக்குவது என்பது நடந்துவருகிறது.
பொதுவாக எல்லோருக்கும் திருமண நாள் என்பது மறக்க முடியாத நாளாக இருக்கும். திருமண நாளில் திருமண நிகழ்வோடு அன்று நடந்த சுவாரசியமான சம்பவங்களும் என்றென்றும் நினைவில் இருக்கும்.
அப்படி ஒரு வட இந்திய திருமணத்தில் நடந்த நிகழ்வு திருமண வீட்டாருக்கு மட்டுமல்ல அந்த நிகழ்வை வீடியோவில் பார்த்த பலருக்கும் சுவாரஸியமும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பலரும் அதை டிக்டாக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால் இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.
வீடியோ வைரல் ஆகிற அளவுக்கு என்ன அப்படி என்ன நடந்தது என்றால், திருமண நிகழ்வில் எல்லோருக்கும் மாப்பிள்ளை தோழன், தோழிப்பெண் இருப்பார்கள் இல்லையா? அதாவது திருமண சடங்குகளின்போது மாப்பிள்ளைக்கும் மணமகளுக்கும் உதவியாக இருப்பார்கள். அப்படி, இந்த திருமணத்தில் மாப்பிள்ளைக்கு பின்னால் இருந்த மாப்பிள்ளை தோழன், மணமகனை கிண்டல் செய்யும் விதமாக அவருடைய தலைப்பாகையை மாற்றி வைப்பது அவர் முகத்தை பிடித்து கிள்ளுவது என்று இருக்கிறார். முதலில் பொறுமையாக இருந்த மணமகன், மாப்பிள்ளைதோழனின் சீண்டல்கள் எல்லை மீறியபோது பொங்கி எழுந்து அவரை சரமாறியாக தாக்குகிறார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வைரல் ஆகி உள்ளது.