திருமணத்துக்கு மணமகன் காரில் வருவாரு, குதிரையில வருவாரு, பறந்து வர்றத பாத்துருக்கீங்களா? – வைரலாகும் வீடியோ

groom skydive video goes viral : மணவாழ்க்கையில் நுழைய மணமகள் தரையில் காத்திருக்க, மணமகன் பாராசூட் மூலம் பறந்து வந்த நிகழ்வின் வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

By: Updated: December 5, 2019, 08:04:41 PM

மணவாழ்க்கையில் நுழைய மணமகள் தரையில் காத்திருக்க, மணமகன் பாராசூட் மூலம் பறந்து வந்த நிகழ்வின் வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த அகிலேஷ் யாதவ் – ககன்பிரீத் சிங் அமெரிக்காவில் முன்னணி நடனக்கலைஞர்களாக உள்ளனர். இவர்களது திருமணம் மெக்ஸிகோ நாட்டின் லாஸ் கபோப்ஸ் கடற்கரை நகரத்தில் வெகுவிமரிசையாக நடத்த திட்டமிடப்பட்டது.

இந்த திருமணத்தை புதுவிதமாக நடத்த அகிலேஷ் யாதவ் விரும்பினார். மணமகள் உள்ளிட்டோர் காத்திருக்க, மணமகன் மற்றும் அவரது பெற்றோர் கப்பலில் திருமணம் நடக்கும் இடத்திற்கு வருவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வானிலை சாதகமாக இல்லாத காரணத்தினால், மணமகனின் பெற்றோர் முன்னதாகவே, திருமணம் நடக்கும் இடத்துக்கு வந்துவிட்டனர். மணமகன் வரவில்லை. அனைவரும் மணமகன் வருகைக்காக காத்துக்கொண்டிருக்க…

மணமகன், வானில் பாராசூட் மூலம் பறந்து வந்து திருமணம் நடைபெறும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். இந்த நிகழ்வை, முன்னணி வீடியோகிராபர் ஒருவர் படம் பிடித்துள்ளார். இந்த வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

வானத்தை தொட்ட வெங்காய விலை. கவலையில் மக்கள்!

கடலூர் ஆற்றுக்குள் குப்பைக் கொட்டிய 2 அதிகாரிகள்…மக்கள் அதிர்ச்சி! நீர்நிலைகளை மாசுபடுத்துவதால் வரும் தீமைகளை பற்றி அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.

இந்த நிகழ்வு குறித்து பேசிய மணமகன் அகிலேஷ் யாதவ், விமானத்தில் இருந்து பைலட் குதிக்க சொல்லும்போது பயமாகவே இருந்தது. ஆனால், அப்போது ககன்தீ்ப்பின் முகம் கண்ணுக்கு முன்னே வந்தது. எனக்காக அவள் நிலத்தில் காத்திருக்கிறாள் என்ற உத்வேகத்துடன் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு குதித்து விட்டேன். இந்த நிகழ்வில் வெற்றியும் பெற்றுவிட்டேன்… இந்த வீடியோ, வைரல் ஆகும் என்று கனவிலும் நினைக்கவில்லை என்று அவர் அகிலேஷ் யாதவ் கூறினார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Groom skydives to join his baraat video goes viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X