/indian-express-tamil/media/media_files/2025/08/21/screenshot-2025-08-21-140515-2025-08-21-14-05-28.jpg)
வால்பாறை அருகே சாலக்குடி சாலையில் தும்பிக்கை இல்லா குட்டி யானையை அழைத்துச் சென்ற யானை கூட்டம் வைரல் வீடியோ.
வால்பாறை அருகே சாலக்குடி செல்லும் சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளாகும் மூங்கில்கள் அதிகம் உள்ளதால் அதிக அளவில் காட்டுயானைக் கூட்டங்கள் சாலையோரம் தென்படுகின்றன பெரியார் புலிகள் காப்பகம் வனப்பகுதி என்பதால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது.
வால்பாறையில் இருந்து சாலக்குடி அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்ல சுற்றுலா பயணிகள் காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் தும்பிக்கை இல்லா குட்டியானை மூன்று வயது ஆகும், பிறந்த முதல் தும்பிக்கை இல்லாமல் இந்த குட்டி யானை உள்ளது தற்போது இந்த பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் காட்டு யானை கூட்டங்கள் வனப்பகுதியை விட்டு வெளியே சாலை கடந்து செல்கிறது இந்நிலையில் காட்டு யானை கூட்டம் தும்பிக்கை இல்ல குட்டி யானையை பாதுகாப்பாக சாலையில் அரவணைத்து வனப்பகுதிக்குள் சென்று வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகுள்ளது.
#kovai#valparaipic.twitter.com/hys03Iy0JZ
August 21, 2025
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.