காட்டில் இறந்த விலங்கின் உடலை கழுகுகள் கூட்டமாக அமர்ந்து கொத்தித் திண்ணும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. காட்டின் துப்புறவாளரான கழுகுகள் பற்றிய அரிய தகவல்களையும் தெரிந்துகொள்வோம்.
காடுகள் பாதுகாப்பு பற்றி பேசும்போது, காட்டு விலங்குகள் மற்றும் பறவைகளின் பாதுகாப்பை பற்றியும் கவனத்தில் கொள்ள வேண்டும். காடுகள் பாதுகாப்பு என்பது காட்டு விலங்குகளையும் பறவைகளையும் உள்ளடக்கியதுதான்.
கழுகுகள் ஒரு இயற்கை துப்புரவாளர்கள். காட்டில் இறந்த விலங்கி உடல்களை உணவாக உண்டு அப்புறப்படுத்துபவை கழுகுகளே. காட்டின் தூய்மையில் கழுகுகளுக்கும் ஒரு பங்கு இருக்கிறது.
காட்டில் இறந்த ஒரு விலங்கின் உடலை கழுகுகள் கூட்டமாக அமர்ந்து கொத்தித் திண்ணும் வீடியோவை ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் கழுகுகள் பற்றிய சில அரிய தகவல்களையும் பகிர்ந்துள்ளார்.
கழுகுகள் பெரும்பாலும் கூட்டமாக சேர்ந்து இருக்கும் சமூக பறவைகள். அவை பார்ப்படற்கு ஆக்ரோஷமாகத் தெரியும். ஆனால், சாப்பிடும் நேரத்தைத் தவிர, அவை ஒன்றுக்கொன்று அரிதாகவே சண்டையிடுகின்றன. கழுகுகள் ஒருபோதும் வேட்டையாடுவதில்லை. அவை கட்டாய துப்புரவாளர்களாக இருக்கின்றன.
கழுகுகளை சுற்றுச்சூழல் மருத்துவர்கள் என்று அழைக்கிறார்க. இறந்த உடல்களை அகற்றி சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்கின்றன. அவைகளால், எதையும் ஜீரணிக்க முடியும். கிருமிகள், நுண்ணுயிரிகள், நோயுற்ற விலங்குகள் போன்றவையும்கூட ஜீரணிக்க முடியும்.. மிகவும் திறமையான துப்புரவாளர்கள் என்று கழுகுகளை பற்றிய அரிய தகவல்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
காட்டில் இறந்த விலங்கின் உடலை கழுகுகள் கூட்டமாக கொத்தித் திண்ணும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதோடு, கழுகுகளைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள் வியப்பை ஏற்படுத்தி வருகின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”