காட்டில் ஒரு புலி தாக்க வருவதைப் பார்த்த ஓநாய்கள் கூட்டமாக ஒன்று சேர்ந்து புலியை விரட்டி அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முதலில் ஓநாய்களை எளிதாக வேட்டையாடி விடலாம் என வந்த புலி, ஓநாய்கள் ஒன்று சேர்ந்து வருவதைப் பார்த்ததும் தெறித்து ஓடிய காட்சியைப் பார்த்த எவருக்கும் இப்போது சொல்லுங்க, காட்டுக்கு யாரு ராஜா என்று கேட்கத் தோன்றுகிறது.
வனவிலங்குகள் பற்றிய வீடியோவுக்கு எப்போதுமே பார்வையாளர்கள் மத்தியில் ஒரு ஈர்ப்பு இருந்துகொண்டே இருக்கிறது. அதனால்தான், டிஸ்கவரி போன்ற தொலைக்காட்சி சேனல்கள் பல பிராந்திய மொழிகளில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இது பார்வையாளர்களிடம் சுவாரசியத்துடன் வனவிலங்குகளைப் பற்றிய புரிதலையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது.
அந்த வகையில், ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் பலரும் காடுகளில் பதிவு செய்யப்படும் வனவிலங்குகளைப் பற்றிய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். காட்டில் ஒரு புலி தாக்க வருவதைப் பார்த்த ஓநாய்கள் கூட்டமாக ஒன்று சேர்ந்து புலியை விரட்டி அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா, “ராஜாவை கூட்டமாக எதிர்கொள்ளும் ஓநாய்கள்; இதை ஒநாய்களால் மட்டுமே துணிச்சலாக செய்ய முடியும். காடுகளிலிருந்து வரும் கண்கவர் உரையாடல்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ குறித்து ஒரு பயனர் கருத்து தெரிவிக்கையில், “நான் எப்பவும் சிங்கம்தான் காட்டுக்கு ராஜான்னு நினைச்சேன். அது புலி. அது வெறும் கூட்டணி.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பயனர், “அநேகமாக அவைகள் புலியை குட்டிகளுடன் அருகிலுள்ள குகையிலிருந்து விரட்டியடிக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது பயனர், “ஓநாய்கள் தங்கள் பலத்தை அல்லது துணிச்சலை கூட்டத்திடமிருந்து பெறுகின்றன, அதே நேரத்தில் புலி மட்டுமே வலிமைமிக்கவைகளை வீழ்த்த முடியும்.” என்று கருத்து தெரிவித்துள்ளார்.