Advertisment

‘அதிர்ஷ்ட காருக்கு’ இறுதிச் சடங்கு நடத்திய குஜராத் குடும்பம்; 1,500 பேர் பங்கேற்ற விழாவில் ரூ.4 லட்சம் செலவு

அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு குஜராத்தி குடும்பம், தங்களின் 12 வயது வேகன் ஆர் காருக்குக்கு ஒரு தனித்துவமான பிரியாவிடை விழா நடத்த 1,500 விருந்தினர்களை வரவழைத்து ரூ. 4 லட்சத்தை செலவு செய்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
car burial

குஜராத்தி குடும்பத்தினர் தங்களின் ‘அதிர்ஷ்ட காருக்கு’ இறுதி ஊர்வலம் நடத்தினர்.

அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு குஜராத்தி குடும்பம், தங்களின் 12 வயது வேகன் ஆர் காருக்குக்கு ஒரு தனித்துவமான பிரியாவிடை விழா நடத்த 1,500 விருந்தினர்களை வரவழைத்து ரூ. 4 லட்சத்தை செலவு செய்துள்ளது. குஜராத்தி குடும்பம் தங்கள் அதிர்ஷ்ட காருக்கு இறுதிச் சடங்கு நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Gujarat family holds funeral for their ‘lucky car’; spends Rs 4 lakh for ceremony attended by 1,500 people

குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் ஒரு காருக்கு நடத்தப்பட்ட ஒரு தனித்துவமான மற்றும் உணர்ச்சிபூர்வமான பிரியாவிடை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 1,500 பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், 12 வயதான வேகன் ஆர் என்ற “அதிர்ஷ்ட காருக்கான” இறுதிச் சடங்குகளை அந்த குஜராத்தி குடும்பம் சமீபத்தில் நடத்தியது.

இந்த விழாவில் 15 அடி ஆழமான குழியில், இறுதிச் சடங்குகளுடன் அந்த வாகனம் புதைக்கப்பட்டது. காரின் மேற்பகுதியில் சாமந்தி மலர் மாலைகள் மற்றும் ரோஜா இதழ்களால் அலங்கரிக்கப்பட்ட வேகன் ஆர் கார், மக்கள் தங்கள் சாதனங்களில் வழக்கத்திற்கு மாறான காட்சியைப் படம்பிடித்தபடி குழிக்குள் இறக்கப்பட்டது.

காரின் உரிமையாளரான சஞ்சய் பொலரா, இந்த வாகனம் தனது குடும்பத்திற்கு பல ஆண்டுகளாக செழிப்பையும் மரியாதையையும் கொண்டு வந்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் கூறியுள்ளார். கிர்ந்து கொண்டார். "நான் இந்த காரை ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினேன், அது குடும்பத்திற்கு செழிப்பைக் கொண்டு வந்தது. தொழிலில் வெற்றியைக் கொண்டுவந்தது மட்டுமின்றி எனது குடும்பத்துக்கும் மரியாதை கிடைத்தது. அந்த வாகனம் எனக்கும் எனது குடும்பத்துக்கும் அதிர்ஷ்டமாக அமைந்தது. எனவே, அதை விற்பதற்குப் பதிலாக, எனது பண்ணையில் ஒரு சமாதியைக் காணிக்கையாகக் கொடுத்தேன்” என்று பொலரா கூறினார்.

இன்ஸ்டாகிராமில் @jist.news பகிர்ந்த அந்த வழக்கத்திற்கு மாறான நிகழ்வின் வீடியோ வைரலானது.

வீடியோவைப் பாருங்கள்:

எதிர்கால சந்ததியினருக்கு காரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், புதைக்கப்பட்ட இடத்தில் மரத்தை நடவிருப்பதாக பொலரா பகிர்ந்து கொண்டார். குடும்பத்தின் "அதிர்ஷ்ட கார்" அதன் அடியில் உள்ளது என்பதை நினைவூட்டுவதாக மரம் நிற்கும் என்றார்.

விழாவிற்கான தயாரிப்பில், பொலரா தனது கிராமத்தைச் சேர்ந்த சுமார் 2,000 பேருக்கு நான்கு பக்க அழைப்பிதழை அனுப்பினார். அழைப்பிதழில், “இந்த கார் 2006 முதல் ஒரு குடும்ப உறுப்பினரைப் போல் உள்ளது, இந்த கார் எங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தந்தது. நாங்கள் செழிப்பைப் பெற்றோம், சமூகத்தில் எங்கள் நற்பெயர் உயர்ந்தது. இந்த கார் எங்கள் நினைவில் எப்போதும் இருக்க வேண்டும், அதனால்தான், இந்த காரின் சமாதியை (புதைக்க) திட்டமிட்டுள்ளோம்" என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment