/indian-express-tamil/media/media_files/2025/09/09/d-gukesh-fide-2025-09-09-07-20-37.jpg)
ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் போட்டியின் நான்காவது சுற்றுக்காக உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகருக்குச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த இளம் சதுரங்க வீரர் குகேஷை ரசிகர்கள், குறிப்பாகக் குழந்தைகள், சூழ்ந்துகொண்டனர்.
ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் போட்டியின் நான்காவது சுற்றுக்காக உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகருக்குச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த இளம் சதுரங்க வீரர் குகேஷை ரசிகர்கள், குறிப்பாகக் குழந்தைகள், சூழ்ந்துகொண்டனர். அவருடன் செல்ஃபி எடுக்கவும், ஆட்டோகிராஃப் வாங்கவும் முண்டியடித்தனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், குகேஷ் அரங்கத்திற்குள் நுழையும்போது, குழந்தைகள் அவரை நோக்கி உற்சாகத்துடன் ஓடி வருவதைக் காண முடிகிறது.
“உலக சாம்பியன் குகேஷ் ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் போட்டியின் நான்காவது சுற்றின் ஆட்ட அரங்கிற்குள் நுழையும்போது குழந்தைகள் அவரை மொய்த்துக்கொண்டனர்!” என்று செஸ் பேஸ் இந்தியா (@ChessBaseIndia) தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
வீடியோவைப் பாருங்கள்:
The World Champion @DGukesh mobbed by kids as he enters the playing hall for Round 4 of FIDE Grand Swiss!
— ChessBase India (@ChessbaseIndia) September 7, 2025
Video: @ram_abhyudaya#chess#chessbaseindia#gukeshpic.twitter.com/v6vFELHSty
இந்த வீடியோ மூன்று லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. பலரும் இதற்குப் பல்வேறு விதமான கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். “இந்திய கிரிக்கெட் வீரர்களை விட இவருக்கு உலக அளவில் அதிக ரசிகர்கள் இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை!” என்று ஒரு பயனர் குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், “அவர் ரஜினிகாந்த் போல நடப்பதைக் கவனிக்காமல் இருக்க முடியவில்லை” என்று கமெண்ட் செய்துள்ளார்.
மற்றொரு பயனர், “அவர் மிகவும் எளிமையான மற்றும் புத்திசாலித்தனமான நபர், அதனால்தான் எல்லோரும் அவரை நேசிக்கிறார்கள். நல்ல வேலையைத் தொடருங்கள், அதாவது வெற்றியடையுங்கள்” என்று வாழ்த்தியுள்ளார்.
இதற்கிடையில், இந்தத் தொடரின் நான்காவது சுற்றில், திவ்யா தேஷ்முக் எகிப்திய கிராண்ட்மாஸ்டர் அமின் பஸ்ஸெமை 46 நகர்வுகளில் தோற்கடித்து தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்தார். குகேஷ், அர்ஜுன் எரிகைசியை எதிர்கொண்டார். இருவரும் சமநிலையில் ஆட்டத்தை முடித்துக்கொண்டனர். மேலும், முதல் நிலை வீரரான பிரக்ஞானந்தா, உலகிலேயே இளம் கிராண்ட்மாஸ்டரான அமெரிக்காவின் அபிமன்யு மிஷ்ராவுடன் சமநிலையில் முடித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.