எச்.ராஜாவின் புதிய திட்டம் சிறுநீர் பாசனம்: மீம்ஸ்களால் வச்சி செய்த நெட்டிசன்கள்!

எச். ராஜா தானாகவே சென்று தற்போது மீம்ஸ் கிரியேட்டர்களிடம் மாட்டிக் கொண்டுள்ளார்.

பாஜக தலைவர் அமித்ஷாவின் ஆங்கில உரையை தமிழில் மொழிப்பெயர்த்து சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்வது போல் பாஜக தேசிய தலைவர் எச் ராஜா நெட்டிசன்களிடம் மாட்டிக் கொண்டுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி தேசியத் தலைவர் அமித்ஷா பல வருடங்கள் கழித்து நேற்றைய தினம் தமிழகம் வந்திருந்தார். பின்பு சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு கூட்டம் ஒன்றிலும் கலந்துக் கொண்டு சிறப்பு உரையாற்றியானர். இந்த உரையில் அமித்ஷா பொருளாதாரம், ஆட்சி மாற்றம், பாஜகவின் வெற்றி, தோல்வி, புதிய திட்டங்கள் முக்கியமான பல்வேறு தகவல்கள் குறித்து பேசினார்.

அமித்ஷாவின் இந்த உரை முழுவதும் இந்தியில் இருந்ததால், அதை உடனுக்குடன் மொழிபெயர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் பாஜக தேசிய தலைவர் எச் ராஜா. அமித்ஷா ஒவ்வொரு கருத்தாக கூற அதை எச். ராஜா தமிழில் மொழிப்பெயர்த்தார். அப்போது தான் அரங்கத்தில் இருந்த ஒட்டுமொத்த மக்களும் வாய் விட்டு சிரிக்கும் வகையில் ஒரு சம்பவம் அரங்கேறியது.

அமித்ஷா மைக்ரோ இரிகேஷன் (சொட்டுநீர் பசனம்) திட்டத்திற்காக 332 கோடி கொடுக்கப்பட்டது என்று இந்தியில் தெரிவித்தார். இதனை மொழிபெயர்த்த எச் ராஜா ‘சிறுநீர் பாசன திட்டங்களுக்காக 332 கோடி கொடுக்கப்பட்டுள்ளது என்று மொழிப்பெயர்தார். சொட்டு நீர் பாசன திட்டத்தை சிறுநீர் பாசன திட்டம் என்று ராஜா கூறியது தான் இன்று சமூகவலைத்தளங்களில் உலா வந்துக் கொண்டிருக்கும் அத்தனை மீம்ஸ்களுக்கும் காரணம்.

நெட்டிசன்கள், எச் ராஜா போன்ற அரசியல் தலைவர்களை பாரபட்சம் பார்க்காமல் மீம்ஸ்களால் கிண்டல் செய்து வருவதை முழு நேர வேலையாக செய்து வருகின்றன. இந்நிலையில் எச். ராஜா தானாகவே சென்று தற்போது மீம்ஸ் கிரியேட்டர்களிடம் மாட்டிக் கொண்டுள்ளார்.

×Close
×Close