இந்தியர்களின் செல்ல குழந்தை: கனடா பிரதமரின் குட்டி மகனின் ‘படுசுட்டி’ மொமண்ட்ஸ்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரச முறை பயணமாக கடந்த வாரம் இந்தியா வந்தார். தன் குடும்பத்தினருடன் இந்தியாவில் இடங்களுக்கு ஜஸ்டின் சுற்றிப் பார்த்தார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரச முறை பயணமாக கடந்த வாரம் இந்தியா வந்தார். ஒருவார காலம் தன் குடும்பத்தினருடன் இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கு சென்று ஜஸ்டின் ட்ரூடோ சுற்றிப் பார்த்தார். கனடா பிரதமர் ஜஸ்டின் பல்வேறு சமயங்களில் இந்திய மக்களை வெகுவாக கவர்ந்துள்ளார். ஆனால், அவரைவிட இந்திய மக்களின் செல்லம் அவரது இளைய மகன் ஹேட்ரியன் ட்ரூடோதான்.

இந்தியா வந்தடைந்தபோது குடும்பத்தினருடன் இணைந்து வணக்கம் செலுத்தியபோதும், தன் தந்தைக்கு கொடுத்த பெரிய பூங்கொத்தை அவன் பிடித்துக் கொண்டதும் என ஆரம்பத்திலேயே இந்திய மக்களை ஹேட்ரியன் வெகுவாக கவர்ந்தான்.

தாஜ்மஹாலில் போட்டோவுக்கு போஸ் கொடுத்தல், கோவிலில் டான்ஸ் ஆடுதல் என அவனது சேட்டைகள் ஒவ்வொன்றும் ரசிக்கும்படியாக இருந்தன. பிரதமர் மோடி முன்பு சிகப்பு கம்பளத்தில் அமர்ந்து விளையாண்டது, அவர் கன்னத்தை அன்பாக வருடியபோது சோகமாக முகத்தை வைத்துக் கொண்டதுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

×Close
×Close