பெண்ணின் தலையில் எச்சில் துப்பி ஹேர்ஸ்டைல்… சிகையலங்கார நிபுணர் மீது வழக்குப்பதிவு

அந்த வீடியோவில், சிகைலயங்காரம் செய்யும் போது அருகில் தண்ணீர் இல்லை என்றால் பரவாயில்லை. நீங்கள் எச்சில் துப்பிக் கொள்ளலாம்” எனக் கூறுவதை கேட்க முடிகிறது.

பிரபல சிகை அலங்கார நிபுணர் ஜாவித் ஹபீப், தலையில் தெளிக்க தண்ணீர் இல்லாததால் பெண்ணின் கூந்தல் மீது எச்சிலை துப்பிய வீடியோ வைரலான நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மன்சூர்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மூன்று பிரிவுகளின் கீழ் ஜாவித் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் கிங் வில்லா ஹோட்டலில், நான்கு நாள்களுக்கு முன்பு சிகையலங்காரம் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகடெல்லியைச் சேர்ந்த பிரபல சிகையலரங்கார நிபுணர் ஜாவேத் ஹபீப் கலந்து கொண்டார். அப்போது, எடுக்கப்பட்ட வீடியோவில், பெண்ணின் தலையில் ஜாவர் எச்சிலை துப்புவது தெளிவாக தெரிந்தது. இந்த காணொலி சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு கண்டனங்கள் எழுந்தன.

இந்த வீடியோவின் நம்பகத்தன்மையை தி இந்தியன் எக்ஸ்பிரஸால் கண்டறிய முடியவில்லை. அந்த வீடியோவில், சிகைலயங்காரம் செய்யும் போது அருகில் தண்ணீர் இல்லை என்றால் பரவாயில்லை. நீங்கள் எச்சில் துப்பிக் கொள்ளலாம்” எனக் கூறுவதை கேட்க முடிகிறது.

இதற்கிடையில், அந்த வீடியோவில் ஜாவித்திடம் சிகையலங்காரம் செய்து கொண்ட பூஜா குப்தா, இந்த விவகாரம் தொடர்பாக வீடியோ வாயிலாக பேசியிருந்தார்.

அவர், ” நான் ஒரு அழகு நிலையம் நடத்தி வருகிறேன். ஜாவித் ஹபீப்பின் கருத்தரங்கில் கலந்து கொண்டேன். சிகை அலங்காரம் செய்வதற்காக நான் மேடைக்கு அழைக்கப்பட்டேன். ஆனால், அவர் என்னிடம் அநாகரிகமாக நடந்து கொண்டார். தண்ணீர் இல்லை என்றால் எச்சில் துப்பவும் முடியை வெட்டலாம் என கூறினார். நான் அவர் மீது புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த வீடியோவை தேசிய பெண்கள் ஆணையம், உத்தரபிரதேச மாநில போலீசாருக்கு அனுப்பி இதுபற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

சிகையலங்கார நிபுணருக்கு எதிராகப் போராட்டங்களும் நடத்தப்பட்டன. வலதுசாரி அமைப்பான இந்து ஜாக்ரன் மஞ்ச், சிகையலங்கார நிபுணரின் உருவபொம்மையை எரித்து அவரைக் கைது செய்ய வலியுறுத்தியது.

இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக ஜாவேத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வாயிலாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

அதில், அந்நிகழ்ச்சியின் போது பேசிய சில வார்த்தைகள் மக்களை புண்படுத்துவதாக அமைந்து விட்டது. வல்லுநர்கள் அதிகளவில் கலந்துகொள்வதால், இது போன்ற நிகழ்வுகள் நீண்டதாக இருக்கும். எனவே, மக்களை மகிழ்விக்க நகைச்சுவைக்காக அப்படி பேசினேன்.

இருப்பினும், இந்த சம்பவத்தால் நீங்கள் புண்பட்டிருந்தால், என்னை மன்னியுங்கள் என்று என் இதயத்திலிருந்து கேட்டுக் கொள்கிறேன்” என கூறியிருந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Hairstylist jawed habib booked after video of him spitting on woman goes viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com