கேலி கிண்டலுக்கு ஆளான ஹனான்.. இன்று மருத்துவமனையில் அனுமதி!

இன்று தனது காரில் திரும்பிக் கொண்டு இருந்தார் ஹனான்.

கேரள சமூகவலைத்தளங்களில் பல்வேறு கேலி கிண்டலுக்கு ஆளான கல்லூரி மாணவி ஹனான் விபத்தில் சிக்கியுள்ளார்.

கடந்த மாதம் கேரள மக்களின் ஃபேஸ்புக் பக்கங்களில் பல்வேறு கேலி கிண்டலுக்கு ஆளான 19 வயது கல்லூரி மாணவி தான் ஹனான். தொடுபுழாவில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் இவர் காலை கல்லூரி சென்ற வந்த பின்னர், மாலையில் தெருவில் மீன் விற்பார்.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஹனானுக்கு குடிகார தந்தை, உடல் நலம் சரியில்லாத அம்மா, பள்ளியில் படிக்கும் தம்பி. இவர்கள் மூவரின் செலவையும், தன்னுடைய படிப்பு செலவையும் மீன் விற்றும் வரும் பணத்தில் தான் வழிநடத்துவர் ஹனான்.

எர்ணாகுளத்தின் ஏது ஒரு மூலையில் இருந்த இவர், ஒரே ஒரு பதிவுக்கு பின்னர் தலைப்பு செய்தியாக மாறினார். பிரபல கேரள பத்திரிக்கை ஒன்றில் ஹனான் குறித்த சிறப்பு கட்டுரை வெளியானது. அந்த கட்டுரை தான் அவர் வாழ்க்கையில் தீராத புகழையும், அழியாத காயத்தையும் ஏற்படுத்தியது.

ஒருபக்கம் ஹனான் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழ, மறுபக்கம் அவருக்கு ஏகப்பட்ய கைகள் உதவி புரிந்தன. பிரபலங்கள் சினிமா கலைஞர்கள் பலரும் ஹனானுக்கு ஆதரவாக கருத்துக்கள் தெரிவித்தனர்.பல்வேறு தரப்பில் இருந்து அவருக்கு பண உதவியும் செய்யப்பட்டன.

இப்படி கேரள சமூகவலைத்தளங்களில் வைரல் நாயகியாக வலம் வந்த ஹனானுக்கு மற்றொரு துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொடுங்கலூர் என்ற இடத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு இன்று தனது காரில் திரும்பிக் கொண்டு இருந்தார் ஹனான்.

அப்போது அவரது கார் விபத்தில் சிக்கியது. தில் ஹனனுக்கு படுகாயம் ஏற்பட்டது. டிரைவர் லேசான காயங்களுடன் தப்பினார்.

உடனடியாக ஹனன் திருச்சூரில் உள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து உயர்தர சிகிச்சைக்காக எர்ணாகுளத்தில் இருக்கும் மெடிக்கல் டிரஸ்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், முதுகு தண்டவடத்தில் முறிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. முதுகு எலும்பு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், இதுவரை அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை. தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்ற தகவல் மட்டும் வெளியாகியுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close