சேட்டை மன்னன் ஹர்பஜன் சிங்.. கிரேட் காளியிடமே சண்டையிட்ட வீடியோ!

இந்த போட்டியில் யார் ஜெயித்தார்கள் என்பதை நீங்களே பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், பிரபல மல்யுத்த வீரர் தி கிரேட் காளியிடம் சண்டையிட்ட வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் சேட்டைகளின் மன்னன் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. தமிழ்பற்று, நாட்டுப்பற்று என சென்னை சூப்ப்ர் கிங்ஸ் அணியில் இடம்பெற்ற போது ஹர்பஜன் சிங் பண்ண சேட்டைகள் எல்லாம் ஏராளம். நடந்து முடிந்த ஐபிஎல் 2018 லீக் தொடரில் சென்னை அணியில் ஹர்பஜன் சிங் இடம் பெற்றிருந்தார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நாளிலிருந்து ஹர்பஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழிலியே பதிவு செய்து கலக்கிய தருணங்களை எல்லாம் அவ்வளவு எளிதாக ரசிகர்கள் மறந்திடவில்லை. அதே நேர்ச்த்தில் ஹர்பஜன் ரொம்ப ரொம்ப சீரியசான நபர் என்று நினைத்தவர்கள் எல்லாம் அடா… நம்ம ஹர்பஜன் இவ்வளவு ஜாலியான மனிதரா என்று எண்னி திகைத்தனர்.

சென்னை அணியின் வெற்றிக்கு பிறகு, கொஞ்ச நாள் சைலண்டா இருந்த ஹர்பஜன் சிங் தற்போது கிரேட் காளியிடம் கை மல்யுத்தம் போட்டி நடத்திய வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளார். மல்யுத்த வீரர் கிரேட் காளி குறித்து அறிமுகமே தேவையில்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மல்யுத்தம் பார்ப்பவர்கள் அனைவருக்கும் 7அடி உயரம் கொண்ட கிரேட் காளி பற்றி நன்கு தெரிந்திருக்கும்.

இவர்கள் இருவரும் மோதிக் கொண்ட இந்த போட்டியில் யார் ஜெயித்தார்கள் என்பதை நீங்களே பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close