New Update
/indian-express-tamil/media/media_files/2025/08/07/haridwar-road-2025-08-07-16-10-44.jpg)
பயங்கர மழை, கண்முன்னே சரிந்த மலை... கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர் தப்பிய 3 பேர்!
கனமழையின் காரணமாக, உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், ஒரு சில விநாடி இடைவெளியில் 3 இளைஞர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்தச் சம்பவம் அங்கிருந்த மக்களை உறையச் செய்தது.
பயங்கர மழை, கண்முன்னே சரிந்த மலை... கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர் தப்பிய 3 பேர்!
கனமழையின் காரணமாக, உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், ஒரு சில விநாடி இடைவெளியில் மூன்று இளைஞர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்தச் சம்பவம் அங்கிருந்த மக்களை உறையச் செய்தது.
சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வரும் இந்த சிசிடிவி வீடியோவில், 3 இளைஞர்கள் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் மலைப்பாதை வழியாகச் சென்று கொண்டிருக்கின்றனர். அப்போது, திடீரென மான்சா தேவி மலையில் இருந்து பாறைகளும் மண்ணும் பயங்கர சத்தத்துடன் சரிந்து விழுகின்றன.
VIDEO | Uttarakhand: Lucky escape for two youths on bike as landslide debris fall over them in Haridwar.
— Press Trust of India (@PTI_News) August 6, 2025
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/XCmITthdot
மலை சரிந்துவிழும் அந்தக் கணத்தில் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுகிறது. நொடிப்பொழுதில் சுதாரித்துக்கொண்ட 3 பேரும் கீழே கிடந்த வண்டியைக்கூட எடுக்காமல், உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அலறியடித்து ஓடுகின்றனர். சில விநாடிகள் தாமதித்திருந்தால், அவர்கள் அனைவரும் பாறைகளுக்கு அடியில் சிக்கியிருப்பார்கள். இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் பயத்தில் உறைந்துபோய், பின்னர் ஓடிவந்து அவர்களுக்கு உதவி செய்தனர். இந்தச் சம்பவத்தில் இளைஞர்கள் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. அருகிலிருந்தவர்களும் சரியான நேரத்தில் ஒதுங்கிவிட்டனர்.
இந்தச் சம்பவம் ஒருபுறம் இருக்க, உத்தரகண்ட் மாநிலம் முழுவதும் மோசமான வானிலை காரணமாகப் பெரும் சேதத்தைச் சந்தித்து வருகிறது. உத்தரகாசியில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50 பேரைக் காணவில்லை. இவர்களில் 11 ராணுவ வீரர்களும் அடங்குவர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.