New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/24/Y4J1JVGNz0LPD5oRBOtU.jpg)
ஆகஸ்ட் 6, 2020 -ல், சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்குல, ரியா சக்ரவர்த்தி, அவருடைய அப்பா அம்மா, தம்பி, இன்னும் 2 பேர் மீது சி.பி.ஐ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்து கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் கழித்து, மார்ச் 22, 2025-ல், சி.பி.ஐ ஒரு முடிவு அறிக்கையை தாக்கல் செய்தது. அவரது மரணம் "தற்கொலை" என்று அறிக்கை முடிவு செய்தது. அவரது அப்போதைய காதலியான ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினரை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்தது. இந்த முன்னேற்றத்திற்குப் பிறகு, 20200ல் ரியா சக்ரவர்த்திக்கு எதிரான ஊடக கவரேஜை பல முக்கிய பிரமுகர்கள் விமர்சித்தனர், மன்னிப்பு கோர வலியுறுத்தியுள்ளனர்.
Nice job, Indian TV media. You hounded Rhea Chakraborty like a witch in a medieval trial—no evidence, no shame, just TRPs. Who needs facts when you have flashing graphics and angry panels? For me, journalism died that day 😢!
— Harsh Goenka (@hvgoenka) March 23, 2025
தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா, அவரோட சமீபத்திய எக்ஸ் பதிவில், நம்ம இந்தியன் டிவி சேனல்கள நல்லா வெளுத்து வாங்கியுள்ளார். “நல்ல வேலை இந்தியன் டிவி சேனல்களா! இடைக்காலத்துல சூனியக்காரியை துரத்துகிற மாதிரி ரியா சக்ரவர்த்தியை துரத்துனீர்கள் — ஒரு ஆதாரமும் இல்லை, உங்களுக்கு வெட்கம் இல்லை, டி.ஆர்.பி மட்டும் தான் முக்கியம். ஒளிரும் கிராபிக்ஸ், கோபமான பேனல்ஸ் இருக்கும்போது, உண்மை யாருக்கு வேண்டும்? அன்னைக்கு தான் எனக்கு பத்திரிகை செத்து போனது” என்று கோபமாக எழுதியுள்ளார்.
ஆகஸ்ட் 6, 2020-ல், சி.பி.ஐ ரியா சக்ரவர்த்தி, அவருடைய அப்பா அம்மா, தம்பி, இன்னும் 2 பேர் மீது, தற்கொலைக்கு தூண்டுதல், மோசடி, தவறாக கட்டுப்படுத்துதல், திருட்டு, நம்பிக்கை துரோகம், மிரட்டல்னு பல குற்றச்சாட்டுகள சுமத்தி எஃப்.ஐ.ஆர் பதிவு பண்ணியது. சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் அப்பா பாட்னா போலீஸ்ல கொடுத்த புகாரின் அடிப்படையில தான் இந்த எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த நபர்கள் தான் சுஷாந்த் ராஜ்புத் தற்கொலை பண்ணிக்க தூண்டினார்கள் என்று அவர் குற்றம் சாட்டினார்.
2020 இல் ராஜ்புட்டின் மரணத்திற்குப் பிறகு, மும்பை காவல்துறை முதலில் ஒரு தற்செயலான இறப்பு அறிக்கையை பதிவு செய்தது. ஒரு மாதத்திற்குப் பிறகு, சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தை, கே.கே.சிங் சக்ரவர்த்தி மற்றும் மற்றவர்கள் மீது பாட்னா காவல்துறையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தார். பின்னர் நடிகர் வழக்கை மும்பைக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதற்கிடையில், பீகார் அரசு விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.