Advertisment

கதையல்ல நிஜம்: ஒரு பெரிய நரியை தூக்கிக்கொண்டு பறந்த பருந்து; இயற்கையின் ரகசியம்: வைரல் வீடியோ

நீங்கள் சிறுவயதில் இரண்டு கொக்குகள் ஒரு ஆமையை தூக்கிக்கொண்டு பறந்த கதையைக் கேட்டிருப்பீர்கள். அது போல, இங்கே ஒரு பருந்து ஒரு பெரிய நரியைத் தூக்கிக் கொண்டு பறந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், இது கதையல்ல நிஜம்.

author-image
WebDesk
New Update
hawk fox

இங்கே ஒரு பருந்து ஒரு பெரிய நரியைத் தூக்கிக் கொண்டு பறந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. (Image: x/ @AMAZlNGNATURE)

Viral Video: மனிதன் பரிணாமங்களின் ஊடே பல ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக தனது அறிவால் இந்த இயற்கையைப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறான். ஆனாலும், அவனால், இந்த பிரபஞ்சத்தை இயற்கையை இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. இயற்கை மனிதன் அறிந்துகொள்ள முடியாத இன்னும் பல அதிசயங்களையும் ரகசியங்களையும் மறைத்து வைத்திருக்கிறது.

Advertisment

நீங்கள் சிறுவயதில் இரண்டு கொக்குகள் ஒரு ஆமையை தூக்கிக்கொண்டு பறந்த கதையைக் கேட்டிருப்பீர்கள். அது போல, இங்கே ஒரு பருந்து ஒரு பெரிய நரியைத் தூக்கிக் கொண்டு பறந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், இது கதையல்ல நிஜம்.

ஒரு பருந்து கோழியை அதைவிட சிறிய பறவையை கொத்தி தூக்கிச் செல்வதை பலரும் பார்த்திருப்பீர்கள். பாம்பு, கோழிக் குஞ்சு, சிறிய பறவைகள், மீன் ஆகியவற்றை பருந்து தனது கூறிய அலகால் கொத்தி காலில் இறுக்கமாகப் பிடித்து தூக்கிச் செல்லும் வீடியோக்களை பலரும் பார்த்திருப்போம். சிறு முயலை கொத்தி தூக்கிச் செல்வதையும்கூட பார்த்திருப்போம்.  ஆனால், 2 கிலோவுக்கும் குறைவான எடை கொண்ட ஒரு பருந்து, 6 கிலோவுக்கு மேல் எடைகொண்ட ஒரு வளர்ந்த பெரிய நரியை எப்படி தூக்கிகொண்டு பறக்க முடியும் என்பது வியப்பாகத்தான் இருக்கிறது. இதுதான் இயற்கையின் ரகசியமா?

ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுரேந்தர் மெஹ்ரா தனது எக்ஸ் பக்கத்தில்,  Nature is Amazing என்ற எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். ஒரு பருந்து, இறந்த நரியை தூக்கிக்கொண்டு பறக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்த வீடியோவில், ஒரு மலைப் பிரதேசக் காட்டில், பருந்து ஒன்று ஏதோ ஒரு விலங்கின் உடல் மீது அமர்ந்திருக்கிறது. சில வினாடிகளில், அந்த பருந்து திடீரென அந்த விலங்கின் உடலைத் தூக்கிக்கொண்டு பறக்கிறது. இதைப் பார்ப்பவர்கள் அனைவரும் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. ஏனென்றால், அந்த பருந்து தூக்கிக்கொண்டு பறந்தது ஒரு வளர்ந்த பெரிய நரியின் இறந்த உடல் அது. ஒரு பருந்து இறையாக நரியைத் தூக்கிக் கொண்டு பறக்கும் வீடியோ பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வீடியோவைப் பகிர்ந்த ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுரேந்தர் மெஹ்ரா,  “காற்றின் சக்தி, காட்டின் சக்தி” என்று வியந்துள்ளார். பருந்துகள், கழுகுகள், வனத்தின் துப்புரவாளர்கள், இயற்கையின் தூய்மைப் பணியாளர்கள் என்று சொல்வார்கள். வனத்தில் இறந்த விலங்குகளின் உடல்களை இந்த பருந்துகள், கழுகுகள்தான் உணவாக உட்கொண்டு காட்டைத் துப்புறவு செய்கின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment