/indian-express-tamil/media/media_files/2025/03/23/uNDib3fsbsEUoKRNopfO.jpg)
படம்: Instagram (AI உருவாக்கப்பட்டது)
கேரள மாநிலம் பாலக்காட்டில் டைனோசர் வளர்ப்பு தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாலக்காடு என்றால் கம்பீரமான மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பின்னணியில் அமைக்கப்பட்ட பசுமையான வயல்வெளிகள்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், பாலக்காட்டில் உள்ள டைனோமுக்கு என்ற கற்பனை கிராமத்தில் டைனோசர்களுடன் மக்கள் இணக்கமாக இணைந்து வாழ்வது பற்றிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
1.25 நிமிட அந்த வீடியோவில், ஒரு பெரிய டைனோசர் கூட்டம் மெதுவாக வயல்வெளியைக் கடந்து செல்வது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. "மனிதர்களால் முதலில் வளர்க்கப்பட்ட உயிரினங்களில் டைனோசர்களும் அடங்கும்" என்று இந்த வீடியோ குறிப்பிடுகிறது.
இந்த செய்தியை மலையாளத்தில் படிக்க கிளிக் செய்யவும்
டைனோசர்கள் பெரும்பாலும் மென்மையானவை, முட்டை மற்றும் இறைச்சிக்காக அவை வளர்க்கப்படுகின்றன. அடுத்தடுத்த காட்சிகளில் ஒரு பெண் தனது கொல்லைப்புறத்தில் ஒரு இளம் டைனோசருக்கு தீவனம் தயாரிப்பது, லுங்கி அணிந்த ஒரு மனிதன் தலையில் ஒரு பெரிய டைனோசர் முட்டையை சுமந்து செல்வது, மற்றும் டைனோசர் பொருட்களை விற்கும் கடைகள் ஆகியவை காட்டப்படுகின்றன.
பேபி டைனோசர்கள் குழந்தைகளுடன் விளையாடுவது, டைனோசர் முட்டையை சமைத்து சாப்பிடுவது, டைனோசர்கள் விவசாயம் செய்வது என்று நம்ப முடியாத அழகிய காட்சியை ஸ்டோரி டெல்லர்ஸ் யூனியன் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், டைனோசர்கள் வளர்ப்பு அனுபவத்தை மனோகரன் என்ற AI கதாபாத்திரம் விவரிக்கிறது.
"இது ஒரு எளிதான மற்றும் அதிக லாபகரமான விவசாய முறையாகும்," என்று அவர் கூறுகிறார், மேலும், "ஒரு வருடத்தில், நாங்கள் டைனோசர்களிடமிருந்து சுமார் 300 முட்டைகளை உற்பத்தி செய்கிறோம்." டைனோசர் முட்டை ஆம்லெட் சுவையாக இருக்கும் என்கிறார்.
அழகிய கிராமப்புற பின்னணியில் இந்த காணொளி அமைக்கப்பட்டு உள்ளது. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட டைனோசர்களின் மிக துல்லியமான ஆடியோ மற்றும் காட்சி தரத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் இந்த வீடியோ, ஏற்கனவே 1.9 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. தமிழ் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி உள்ளிட்ட பல பிரபலங்களும் இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
தற்போது பாராட்டப்படும் இந்த காணொளி, சினிமாவில் சாதிக்க விரும்பும் 6 ஆர்வமுள்ள திரைப்பட தயாரிப்பாளர்களைக் கொண்ட தி ஸ்டோரிடெல்லர்ஸ் யூனியனின் சிந்தனையில் உருவானது.
குறும்படங்களுடன் தொடங்கிய அவர்களது பயணம், விளம்பரங்கள், இசை வீடியோக்கள் வரை விரிவடைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு அவர்களின் புதிய படைப்பாகும்.
கல்லூரி நாட்களில் இருந்தே சினிமாவில் பணிபுரிய வேண்டும் என்ற கனவு எங்கள் அனைவருக்கும் இருந்தது. அப்படித்தான் நாங்கள் வீடியோ தயாரிப்பில் இறங்கினோம். ஆரம்பத்தில் நாங்கள் ஃப்ரீலான்ஸர்களாகத் தொடங்கினோம். இப்போது, இந்தக் கூட்டணியை உருவாக்க நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம்," என்கிறார் தி ஸ்டோரிடெல்லர்ஸ் யூனியனின் இணை நிறுவனர்களில் ஒருவரான ஷைன் நௌஷாத்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.