Advertisment

இறந்த கன்றை எழுப்ப போராடும் தாய் யானை; இதயத்தை நொறுக்கும் வீடியோ: நெட்டிசன்கள் இரங்கல்

இறந்த யானைக் குட்டியை எழுப்பப் போராடும் தாய் யானைக்கு பல எக்ஸ் பயனர்கள் தங்கள் அனுதாபத்தை வெளிப்படுத்தினர்; இந்த வீடியோ குறித்த் நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
elephant greaving

தாய் யானை இறந்த தன் குட்டியை எழுப்ப போராடும் காட்சி

தாய் யானை தனது இறந்த குட்டியின் உயிரற்ற உடலுடன் நின்று, அதன் இறப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் போராடும் வீடியோ, உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை பரிதாபம் கொள்ளச் செய்துள்ளது. மாவட்ட கூடுதல் வன அலுவலர் (ஏ.டி.எஃப்.ஓ) ஜெயந்தா மோண்டல் பதிவு செய்த இந்த வீடியோவை ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். துக்கமடைந்த தாய் யானை தனது கன்றின் இழப்பைப் புரிந்துகொள்ள முடியாமல் உடலை இழுத்துச் செல்லும் காட்சி பார்ப்பவர்களின் இதயத்தை நொறுக்கும் விதமாக அமைந்துள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: WATCH: IFS officer shares heart-breaking video of mother elephant grieving her calf

பர்வீன் கஸ்வான் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார், “தாய் யானையால் தனது கன்றின் இறப்பைப் புரிந்து கொள்ள முடியவில்லை. தாய் யானை தனது கன்றின் உடலை சிறிது நேரம் இழுத்துக்கொண்டே இருக்கிறது - சில சமயங்களில் நாட்கள் கணக்கில் அப்படி செய்யும். யானைகளும் நம்மைப் போன்றவர்கள் - அவைகள் மிகவும் மனிதாபிமானமுள்ளவைகள். இது போன்ற காட்சியை நாங்கள் எதிர்கொள்வது முதல் சம்பவம் அல்ல, இந்த வீடியோ ஏ.டி.எஃப்.ஓ ஜெயந்தா மோண்டலால் படம்பிடிக்கப்பட்டது.  கடந்த பல வருட கள சேவையில் இதுபோன்ற சில நிகழ்வுகளை நான் தனிப்பட்ட முறையில் பார்த்திருக்கிறேன். சில சமயங்களில் முழு மந்தைகளும் சடங்கு செய்கின்றன - அது ஒரு இறுதி ஊர்வலம் போல் தெரியும்.” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவைப் பாருங்கள்:

இந்த வீடியோ 1,50,000 பார்வைகளைப் பெற்றுள்ளது, பலர் யானைக்கு ஆழ்ந்த அனுதாபத்தை வெளிப்படுத்தினர். ஒரு பயனர் எழுதினார், “ஒரு தாய் யானை தன் குட்டியை எழுப்புவதன் மூலம் அவற்றின் தாய்மை உணர்வின் ஆழத்தையும் வலுவான பிணைப்பையும் காட்டுகிறது. இது பரிதாப உணர்வையும் தூண்டுகிறது. ஆனால், வனவிலங்குகள் மற்றும் அவற்றின் இயல்பான நடத்தைகளை அதிகமாக மனிதர்களுடன் தொடர்புபடுத்தாமல் மதிக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு நபர் எழுதினார், “அவர்கள் நம்மை விட பல வழிகளில் சிறந்தவர்கள். சில மனிதர்கள் அவர்களை மிகவும் மோசமாக நடத்தினாலும், அவர்கள் இன்னும் நம் முழு இனத்தையும் தாக்கவோ அல்லது மிதிக்கவோ இல்லை. மேலும், முக்கியமாக, அவைகள் ஒன்றுக்கொன்று தாக்காது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment