Viral Video : நல்லது செய்; நல்லதையே செய் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொண்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். சிறிய ஜீவனுக்கும் துளியும் தீங்கற்ற வாழ்க்கை வாழ்வது கடினம் தான். ஆனாலும் கூட, நம்மால் முடிந்த அளவு நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு உதவி செய்கின்ற போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்று தான் கூற வேண்டும்.
மற்றவர்களுக்கு உதவி செய்வதை விடுங்கள், இங்கே ஒருவர் அணில் குட்டி ஒன்றுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த 41 நொடி வீடியோ இன்று சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்ட வீடியோக்களில் ஒன்றாக உள்ளது. அந்த வீடியோ ஒன்றில் ஒரு நபர், மிகுந்த தாகத்துடன் இருக்கும் அணில் ஒன்றுக்கு தண்ணீர் தந்து கொண்டிருக்கிறார். அதனை மிகவும் அரவணைத்து அவர் பார்த்துக் கொண்டிருக்க, அந்த அணில் அவருடைய கையில் ஏறி வந்து அமர்ந்து கொண்டது. வீடியோ வெளியிடப்பட்ட 3 நாட்களில் கிட்டத்தட்ட மூன்று மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் இந்த வீடியோவ்வை பார்த்துள்ளனர். 69 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை ரீட்வீட் செய்துள்ளனர்.
பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும் இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு நீங்கள் கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil