New Update
/
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செவ்வாய்கிழமை இடியுடன் கூடிய இரண்டாவது அலையால் மிக அதி கனமழை பெய்தது; அல் ஐனில் உள்ள 'காட்ம் அல் ஷக்லா' 254 மில்லிமீட்டர் மழை பொழிவைப் பதிவு செய்துள்ளது. வரலாறு காணாத மிக அதி கனமழையால் எண்ணெய் நாடு தண்ணீரில் மிதக்கிறது.
ஆங்கிலத்தில் படிக்க: Heavy rain in Dubai, Abu Dhabi sparks a deluge of videos on social media. Watch
அதி கனமழை பொழிவு குறித்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோக்களில், துபாயில் தண்ணீரில் மூழ்கிய மால்கள், சாலைகளில் வெள்ளத்தில் சிக்கிய கார்கள், முற்றிலும் தண்ணீரில் மூழ்கிய துபாய் சர்வதேச விமான நிலையம் ஆகிய காட்சிகளைக் காட்டுகின்றன.
கலீஜ் டைம்ஸின் செய்தியின்படி, “ஏப்ரல் 16-ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கனமழை பெய்தது, அல் ஐனில் உள்ள ‘காத்ம் அல் ஷக்லா’ ஒரே நாளில் 254 மில்லிமீட்டர் மழைபொழிவு பதிவானது - 1949 க்குப் பிறகு மிக அதி கனமழை மழை பெய்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.
Rolls Royce stuck and flooded #dubairain pic.twitter.com/xz59RgEZmY
— CLEAN CAR CLUB (@TheCleanCarClub) April 17, 2024
துபாய் மற்றும் அபுதாபி போன்ற பெரிய நகரங்களின் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதையும், மால்களில் மழைநீர் தேங்கி நிற்பதையும் காட்டும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் நிரம்பி வழிகின்றன.
தீவிர வானிலை காரணமாக, துபாய் சர்வதேச விமான நிலையம் ஏப்ரல் 16-ம் தேதி மாலை வரவிருந்த அனைத்து விமானங்களையும் தற்காலிகமாக திசை திருப்பி அனுப்பியது. இரண்டாவது அலை இடியுடன் கூடிய மழை செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அதிக மழையைக் கொண்டு வந்தது.
Rain in Dubai metro flooded pic.twitter.com/5mpBBvutX4
— drunken master (@farhankhan203) April 17, 2024
ஒரு பயனர் கடுமையான மழையின் பாதிப்பைக் காட்டும் ரீல் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். தெருக்களில் வெள்ளம் சூழ்ந்ததால், மக்கள் எங்கேயும் வாகனம் ஓட்டவோ அல்லது நடக்கவோ முடியாமல் சிரமப்பட்டனர்; பயணிகள் தங்கள் இடங்களை அடைய சிரமப்பட்டனர். கனமழையால் மக்களின் பயணத் திட்டம் ஸ்தம்பித்தது.
அதே போல, பஹ்ரைன், கத்தார், சவுதி அரேபியா போன்ற அண்டை அரபு நாடுகளிலும் மழை பெய்தது. ஓமனுக்கு அருகாமையில், கனமழையால் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டின் அவசரநிலை மேலாண்மைக்கான தேசியக் குழு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.