New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/08/image-63.jpg)
Wallet lost in Mumbai local train returned to man after 14 years
14 ஆண்டுகளுக்கு முன், ரூ.900 பணத்துடன் தொலைந்த பர்ஸை, கண்டுபிடித்த ரயில்வே காவல்,உரிமையாளரிடம் ஒப்பைடைத்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
Wallet lost in Mumbai local train returned to man after 14 years
14 ஆண்டுகளுக்கு முன், ரூ.900 பணத்துடன் தொலைந்த பர்ஸை, கண்டுபிடித்த ரயில்வே காவல் , அதை மீண்டும் பர்ஸ் உரிமையாளரிடம் ஒப்பைடைத்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
மகாராஷ்டிரா நவி மும்பை பகுதியை சேர்ந்த ஹேமந்த் படல்கர், கடந்த 2006-ஆம் ஆண்டு சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ்-பன்வெல் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த போது தனது பர்ஸை இழந்ததாக ரயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஹேமந்த் படல்கர் இதுகுறித்து கூறுகையில்“அந்த நேரத்தில் எனது பர்ஸில் ரூ .900 இருந்தது.. தற்போது, காவல்துறை பர்சையும், 300 ரூபாய் பணத்தையும் கொடுத்தனர். பணமதிப்பு செய்யப்பட்டதினால் அதில் இருந்த ஒரு 500 ரூபாய் நோட்டு தற்போது செல்லாத நிலை உள்ளது. அப்பணம் புதிய நோட்டுகளாக மாற்றப்பட்ட தன்னிடம் காவல்துறை ஒப்படைக்க உள்ளனர். தபால் அட்டை பணிக்காக 100 ரூபாய் பிடிக்கப்பட்டது ,”என்று படல்கர் கூறினார்.
மேலும், " ரயில்வே காவல் அலுவலகத்துக்குச் சென்றபோது, என்னைப் போல் தவறவிட்ட பணத்தைப் பெற்றுக்கொள்ள பலரும் வந்திருந்தனர். அதில், பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூ.1000, ரூ.500 தாள்கள் அதிகம் இருந்தன. அவர்கள் எவ்வாறு திரும்பப் பெறப்போகிறார்கள் என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. இருந்தாலும், 14 ஆண்டுகளுக்குப் பின் என்னுடைய பணமும், பர்ஸும் கிடைத்தது மகிழ்ச்சி'' என்று தெரிவித்தார்.
இவரின், பர்ஸை திருடியவர்கள் சிறிது காலத்திற்கு முன்பு கைது செய்யப்பட்டதாக ரயில்வே போலீஸ் (ஜிஆர்பி) அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.