New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/10/hen-brood-kitten-1.jpg)
ஒரு கோழி பூனைக் குட்டிககளைத் தாய்போல, அடைகாத்து பாதுக்காக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
ஒரு கோழி பூனைக் குட்டிககளைத் தாய்போல, அடைகாத்து பாதுக்காக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
சில நேரங்களில் கோழிகளும் பூனைகளும் எதிரிகளாக சண்டையிட்டுக் கொள்வதைப் பார்த்து இருக்கிறோம். சில டெர்ரரான பூனைகள் கோழி கூண்டுக்குள் சென்று கோழிகளை பிடித்து சென்று விடுவது உண்டு. ஆனால், வித்தியாசமாக கோழி ஒன்று பூனைக் குட்டிகளை அடைகாத்துள்ளது.
பொதுவாக கோழிகள் முட்டைகளை அடைகாத்து கோழிக் குஞ்சு பொரிக்கும். பின்னர், கோழிக்குஞ்சுகளை தனது இரக்கைகளை விரித்து அதற்குள் வைத்து பாதுகாக்கும். அப்படி, ஒரு கோழி தனது இரக்கைகளை விரித்து பூனைக்குட்டிகளை அடைகாத்து பாதுகாப்பாக வைத்திருந்த நிகழ்வு சமூக ஊடகங்களில் வீடியோவாக வெளியாகி நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Once a mother, always a mother. pic.twitter.com/61uQ8N1ab9
— Welcome To Nature (@welcomet0nature) October 5, 2020
அந்த வீடியோவில், ஒரு கோழி அடைகாத்துகொண்டிருக்கையில் அதை ஒருவர் கைகளால் அகற்றும்போது ஆச்சரியப்படும் விதமாக 4 பூனைக் குட்டிகள் இருக்கின்றன. அந்த கோழி மீண்டும் அந்த பூனைக் கூட்டிகளை தனது கதகதப்பான இறக்கைகளால் மூடி தாயாக மீண்டும் அடைகாக்கத் தொடங்குகிறது. இந்த வீடியோவை இதுவரை 1 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். 1,500-க்கும் மேற்பட்டோர் ரி ட்வீட் செய்துள்ளனர். 8,000-க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.