தனது குஞ்சுகளை தூக்கிச் செல்ல வந்த பருந்தை வீரத் தாய்க்கோழி ஒன்று பாய்ந்து தனது அலகால் குத்தி சிதறடிக்கின்ற மெய் சிலிர்க்க வைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தாய்ப் பாசத்துக்கும் தாயின் அரவணைப்பில் கிடைக்கும் பாதுகாப்புக்கும் இணையான பாதுகாப்பு வேறு ஒன்று இருக்க முடியாது. தாய்ப் பாசம் என்பது மனித இனத்தில் மட்டுமல்ல விலங்குகள் பறவைகளிடமும் அதே அளவு தீவிரமாக உள்ளது. அப்படி தாய்ப் பாசத்தையும் தாயின் வீரத்தையும் பறைசாற்றும் வகையில், தனது கோழிக் குஞ்சுகளை தூக்கவந்த பருந்தை தாய்க்கோழி பாய்ந்து பிடித்து தனது அலகால் பருந்தை குத்தி பிச்சி சிதறடிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
இந்த வீடியோ எப்போது எங்கே எடுக்கப்பட்டது என்ற தகவல் உறுதியாகத் தெரியவில்லை. அந்த வீடியோவில், தாய்கோழி ஒன்று தனது குஞ்சுகளுடன் இரை கொத்திக்கொண்டிருக்கிறது. அப்போது எங்கிருந்தோ ஒரு பருந்து கோழிக்குஞ்சுகளை தூக்கிச் செல்ல வேகமாக பறந்துவருகிறது. வேகமாக வந்த பருந்தை பயப்படாமல் வீரமாகபாய்ந்து பிடித்த பாசக்கார தாய்க்கோழி, அந்த பருந்தை தனது அலகால் கொத்தி தனது கால்களில் போட்டு மிதித்து பிச்சி சிதறடிக்கிறது. தாய்கோழியிடம் தாக்கு பிடிக்க முடியாத பருந்து விட்டால் போதும் என்று பயந்து அருகே இருந்த பொந்துக்குள் பதுங்குகிறது. பின்னர், அந்த தாய்க்கோழி குஞ்சுகளை நோக்கி செல்கிறது.
பொதுவாக பருந்துகள் என்றால் வலிமையானவை. கோழிகள் பயந்து ஓடும் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால், தாய்க்கோழிகள் எதற்கும் பயப்படுவதில்லை. அதன் நோக்கம் எல்லாம் தனது குஞ்சுகளை பத்திரமாக பாதுகாப்பதுதான். எதிரி பருந்தாக இருந்தாலும் சரி பாயும் புகியாக இருந்தாலும் சரி பாசம் மிக்க தாய்க்கோழிக்கு எல்லாமே துச்சம்தான்.
கோழிக்குஞ்சுகளை தூக்கிச்ச் செல்ல வந்த பருந்தை தாய்க்கோழி தனது அலகால் கொத்தி காலில் மிதித்து பிய்த்து சிதறடிக்கும் வீடியோவை நெட்டிசன்கள் தாய்ப்பாசத்தை போற்றும் விதமாக சமூக ஊடங்களில் பகிர்ந்து வருவதால் அந்த வீடியோ வைரலாகி வருகிறது. பின்னர் என்ன, அம்மா பாசம் ஒன்றும் சும்மா இல்லை; பருந்தானாலும் பாசமிக்க தாய்க்கோழியிடம் பணிந்துதான் ஆக வேண்டும்.