Hilarious Viral Video of dog stole his hooman’s girl
Hilarious Viral Video of dog stole his hooman’s girl : யானைகளைப் போன்றே நாய்களும் என்ன செய்தாலும் க்யூட் தான். அத்தனை அழகு. நம்முடைய வேலையை துவங்குவதற்கு முன்பு இப்படி ஒரு வீடியோவை பார்த்தோம் என்றால் அனைத்து டென்சன்களும் குறைந்து நாம் மகிழ்ச்சியாக நம் வேலையை ஜாலியான மூடில் செய்யலாம்.
ஜூன் 23ம் தேதி அன்று 25 நொடிகள் மட்டுமே கொண்ட இந்த வீடியோ ரெட்டிடில் வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில் பெண் ஒருவரின் தோளில் தலை சாய்த்து கொண்டிருந்தது அந்த நாய்க்குட்டி. மேலும் அந்த பெண்ணுடன் சேர்ந்து செல்ஃபிகளுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தது.
சில நொடிகளிலேயே அவர்கள் இருவரையும் வீடியோவில் பதிவு செய்யப்படுகிறார் என்பதை உணர்ந்து இருவரும் திரும்பிப் பார்க்கின்றனர். அப்போது அந்த செல்லப்பிராணி தருகிறதே ஒரு பார்வை. அப்ப்பா!
நாய்கள் தான் மனிதர்களின் உற்ற நண்பர்கள் என்று கேள்விப்பட்டிருப்போம். அந்த பார்வையை பார்த்தால் நாம் இது நாள் வரை நினைத்துக் கொண்டிருந்தது தவறோ என்று கூட தோன்றும். காதலி யாருக்கு சொந்தம் என்பது போல் இருக்கும் இந்த ஜாலியான வைரல் வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் செம்ம ஹிட். இந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் பலரும் தங்களின் கருத்துகளை கூறி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil