கேரள மாநிலம், வயநாடு நிலச்சரிவில் சிக்கி தத்தளித்து வரும் நிலையில், புதன்கிழமை இரவு முதல் குறைந்தது மூன்று பெரிய மேக வெடிப்புகள் இமாச்சலப் பிரதேசத்தின் பல பகுதிகளைத் தாக்கின. இதுவரை 36 பேர் காணாமல் போயுள்ள நிலையில் 2 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஆங்கிலத்தில் படிக்க: Himachal cloudburst: Devastating videos of roads in Mandi, Kullu being swept away, Pandoh dam in spate go viral
பேரிடர் வெள்ளத்தின் பாதையைப் படம்பிடிக்கும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியானது. பல உள்ளூர்வாசிகள் பாதுகாப்பான தூரத்தில் இருந்து வெள்ளத்தைப் பார்க்கும்போது பலமான நீரோட்டங்கள் சாலையை அடித்துச் செல்வதை வீடியோக்களில் பதிவாகியுள்ளது.
சாலை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படும் வீடியோவை இங்கே பாருங்கள்:
மற்றொரு வீடியோவில், அப்பகுதியில் மிகப்பெரிய அளவில் வெள்ளம் ஆறாகப் பாய்வதைக் காணலாம்.
நீர் மின் உற்பத்திக்கு பெயர் பெற்ற பியாஸ் ஆற்றின் மீது உள்ள பிரபலமான பாண்டோ அணை, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
அதிகாரிகளின் கூறுகையில், “இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு வியாழக்கிழமை மாநிலச் செயலகத்தில் நிலைமையை மதிப்பாய்வு செய்ய அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். சிம்லாவின் துணை ஆணையர் அனுபம் காஷ்யப், தேசிய பேரிடர் மீட்புப் படை (என்.டி.ஆர்.எஃப்), காவல்துறை மற்றும் உள்ளூர் மீட்புப் பிரிவுகளின் குழுக்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பியுள்ளார்.” என்று தெரிவித்தனர்.
இதற்கிடையில், உத்தரகாண்டில் பெய்த கனமழையால் 5 பேர் உயிரிழந்தனர். அவர்களில் இருவர் குழந்தைகள். கேதார்நாத் யாத்திரை பாதையில் சிக்கித் தவிக்கும் யாத்ரீகர்களை மீட்கும் பணிகளை மாநில பேரிடர் மீட்புப் படை (எஸ்.டி.ஆர்.எஃப்) மேற்கொண்டு வருவதாக உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை புதன்கிழமை 276 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் குறைந்தது 170 பேரைக் காணவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“