காடு பேரதிசயங்களையும் மனிதர்கள் கற்றுக்கொள்வதற்கான ஏராளமான பாடங்களையும் தினமும் நிகழ்த்திக் காட்டிக்கொண்டிருக்கிறது வனமும் வன உயிரினங்களும்.
காட்டு விலங்குகளில் பலமான விலங்கு யானையாக இருக்கலாம். ஆனால், தண்ணீரில் பலம் யாருக்கு என்றால் முதலைக்குதான் பலம். பாகவத புராணத்தில் கூட ஆற்றியில் முதலையிடம் சிக்கிய யானையின் அபயக் குரலைக் கேட்டு பகவான் விஷ்ணுவே காப்பாற்றி மோட்சம் அளித்ததாக கூறுகின்றன.
அப்படி, தண்ணீரில் இருக்கும் முதலையின் பலம் புராணக் காலங்களில் இருந்து கூறப்பட்டு இருந்தாலும் முதலைக்கே சவால் விடக்கூடிய ஒரு நீர் வாழ் விலங்கு உண்டென்றால் அது நீர் யானைதான். முதலை தண்ணீரில் யானையை வீழ்த்தலாம். ஆனால், நீர் யானையை வீழ்த்த முடியுமா?
நீர் நிலையில் முதலையின் வாயில் சிக்கிய கஜேந்திரன் யானையின் அபயக் குரல் கேட்டு பகவான் கிருஷ்ணன் காப்பாற்றிய கதையைப் போல காட்டில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. நீர் நிலையில் முதலையிடம் சிக்கிய காட்டெருமையை நீர் யானைகள் வந்து காப்பாற்றும் வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா வெளியிட்டுள்ளார்.
Hippos come to the rescue of the wild beast…
Robs the crocodile of its lunch pic.twitter.com/C1sFifZt4k— Susanta Nanda (@susantananda3) December 5, 2020
அந்த வீடியோவில், ஒரு நீர் நிலையில் கரையோரம், முதலையொன்று அங்கே வந்த காட்டெருமையின் காலைக் கவ்விப்பிடித்துக் கொள்கிறது. அந்த காட்டெருமை வலியுடன் அந்த முதலையிடம் இருந்து தப்பிக்க போராடுகிறது. வீடியோ பார்ப்பவர்கள் காட்டெருமை மீதான பரிதாபத்துடன் எப்படியாவது, போராடி தப்பித்துவிடும் என்று எதிர்பார்த்தால் தண்ணீரில் யானையின் பலம் கொண்ட முதலை காட்டெருமையை தண்ணீருக்கு இழுத்துச் செல்கிறது. கரையில் நின்று கொண்டிருக்கும் மற்ற காட்டெருமைகளும் வரிக்குதிரைகளும் ஏதும் செய்ய முடியாமல் வேடிக்கை பார்க்கின்றன.
காட்டெருமையின் கதை அவ்வளவுதான் முடிந்தது என்று நம்பிக்கை இழக்கிறபோது, தண்ணீருக்குள் இருந்து வேகமாக வரும் 2 நீர் யானைகள் முதலையை விரட்டிவிட்டு காட்டெருமையைக் காப்பாற்றுகின்றன. முதலையின் வாயில் இருந்து விடுபட்ட காட்டெருமை உயிர் பிழைத்து தப்பி ஓடுகிறது.
முதலை தனது இரையாக காட்டெருமையை தாக்குகிறது என்றாலும் விலங்கினங்களிலும் கருணையுடன் அந்த நேரத்தில் காப்பாற்ற விலங்குகள் உண்டு என்பதை நிரூபிக்கிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”