உண்மையாவே சூப்பர் ஜி..தோள் கொடுக்கும் மோப்ப நாயின் பிறந்த நாளை கொண்டாடிய வனத்துறையினர்!

பக்க பலமாக இருக்கும் “பெல்ஜியம் ஷெப்பெர்ட்” வகையைச் சேர்ந்த மோப்ப நாய் ஆபர்

தன்னுடனே தோள் கொடுக்கும் தோழனாக பயணிக்கும் மோப்ப நாய்-க்கு வனத்துறையினர் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மோப்ப நாய் ஆபர்:

போலீஸ் உங்களின் நண்பர். போலீஸ்கே நண்பர் யார்? என்று கேட்டால் அவர்கள் கைக்காட்டுவது மோப்ப நாய்களை தான். தக்க சமயத்தில் தோள் கொடுப்பான் தோழன் என்பது போல் மிகப் பெரிய குற்றச்செயல்களில் ஏதாவது துப்பு கிடைத்து விடாதா? என ஏங்கும் காவலர்களுக்கு எத்தனையோ சமயங்களில் பல மோப்ப நாய்கள் உதவியாக இருந்து ஈஸியாக அந்த வழக்கை முடித்து வைத்துள்ளது.

அப்படி சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலித்தோல் பதுக்கியிருந்த இடத்தை கண்டுபிடித்தது , சினகுடி வனப்பகுதியில் மாயமான மன வளர்ச்சி குன்றிய நபரை கண்டறிந்தது, கூடலூரில் காணாமல் போன யானை தந்தத்தை மைசூரில் கண்டுபிடித்தது என வனத்துறையினருக்கு கடந்த 3 ஆண்டுகளாக பக்க பலமாக இருக்கும் “பெல்ஜியம் ஷெப்பெர்ட்” வகையைச் சேர்ந்த ஆபர் மோப்ப நாயின் பிறந்தநாளை வனத்துறையினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் பணிபுரியும் இந்த ஆபர் தனது 4 ஆவது பிறந்த நாளை நேற்று கொண்டாடியது. பல்வேறு வழக்குகளில் வனத்துறையினருக்கு உதவிய ஆபரின் பிறந்த நாளை வெகு விமர்சியாக முதுமலை வனத்துறையினர் கொண்டாடினர்.

இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதிலும், ஆபருக்கு வனத்துறையினர் கேக் ஊட்டுவது. பதிலுக்கு ஆபர் அவர்களிடம் ஆண்ட் ஷேக் செய்வது பார்பதற்கே கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் முதுமலை பகுதி மக்களும் கலந்துக் கொண்டனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close